Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியுடன் நடிக்கும் 15 ஹீரோக்கள்.. லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்

ரஜினியுடன் நடிக்கும் 15 ஹீரோக்கள்.. லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இவர் இதற்கு முன்பு அவியல் என்ற ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் இதில் இவருடன் இணைந்து இன்னும் சில இயக்குனர்கள் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இவரை பிரபல இயக்குனராக அடையாளம் காட்டியது, இவர் இயக்கிய கைதி திரைப்படம் ஆகும். நடிகர் கார்த்திக் நடித்த கைதி திரைப்படத்தின் மூலம் தான் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறந்த இயக்குனராக பிரபலப்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து அவர் எடுத்த மாஸ்டர் விக்ரம் போன்ற திரைப்படங்களும் பிளாக் பஸ் ஸ்டாப் திரைப்படங்களாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் பெரும் சாதனை படைத்தது.

இவருடைய திரைப்படங்களில் பல பிரபலங்களை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து இயக்கி திரைப்படங்கள் வெற்றியடைந்தும் இருக்கிறது. அதேபோல் பிரபலங்களுக்கு போதுமான ஸ்பேஸ் கொடுத்து நடிக்க வைப்பதிலும் இவர் சிறந்த இயக்குனர் ஆவார். அதற்கான எடுத்துக்காட்டு தான் சிறப்பு தோற்றத்தில் வந்தாலும் விக்ரம் திரைப்படத்தின் நடித்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தனி வரவேற்பு உண்டு.

- Advertisement -

அதேபோல் தற்பொழுது இவர் தளபதி விஜய் குறித்து இயக்கிய வரும் லியோ திரைப்படத்தில் கூட தளபதி விஜய், அர்ஜுன் சார்ஜா ,சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் த்ரிஷா கௌதம் வாசுதேவ் , மன்சூர் அலிகான் மிஸ்கின், சாண்டி மாஸ்டர் ,பிரியா ஆனந்த் இணைந்து நடித்து வருகிறார்கள்.

- Advertisement -

இவர்கள் எல்லாருக்கும் ஒரு ஒரு சீன் வைத்தால் கூட இரண்டரை மணி நேரம் பத்தாது இருப்பினும் அவர்கள் அனைவரையும் வைத்து எப்படி லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தை இயக்கப் போகிறார்கள் என்று பலருக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இந்த வகையில் தற்போது புதியதாக ஒரு தகவல் வெளியாக இருக்கிறது.லோகேஸ் கனகராஜ் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கப் போவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஹிட்டான திரைப்படங்களை எடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க போகிறாரா என்ற மகிழ்ச்சியை ரசிகர்கள் இணைந்து வருகிறார்கள்.

அதேபோல் இந்த திரைப்படம் 171 வது திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மேலும் 15 ஹீரோக்களை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எதுவும் அதிகாரப்பூர்வமான தகவலாக இன்னும் வெளிவரவில்லை.

எவ்வளவுதான் சாமர்த்தியம் இருந்தாலும் 15 ஹீரோக்களை வைத்து அதுவும் சூப்பர் ஸ்டார் உடைய திரைப்படத்தின் இயக்குவது பாக்ஸ் ஆபிசை தாங்குமா சூப்பர் ஸ்டாரை மட்டும் வைத்தே லோகேஷ் கனகராஜ் சேர்ந்து திரைப்படத்தை இயக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இல்லையோ திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு முடிந்து தற்பொழுது டப்பிங் வேளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து விரைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இயக்கப் போகும் திரைப்படத்தைப் பற்றி தகவலை தயாரிப்பு நிறுவனமே வெளியிடுவார்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

இப்படி லோகேஷ் கனகராஜ் பதினைந்து ஹீரோக்களை வைத்து இயக்கப் போவதாக கூறி இருக்கும் இந்த திரைப்படம் தான் இந்தியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான திரைப்படம் ஆக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் லோகேஷ் கனகராஜ் என்ன பதிலளிக்க போகிறார் என்பது தெரியவில்லை.

Most Popular