Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமா"எனக்கு 150 ரூபாய் முக்கியம்" - தளபதியின் லியோ திரைப்படம் பற்றி ஆச்சரியமான பேட்டியளித்த லோகேஷ்...

“எனக்கு 150 ரூபாய் முக்கியம்” – தளபதியின் லியோ திரைப்படம் பற்றி ஆச்சரியமான பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன இவர் கைதி , மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களின் வெற்றியாள் தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார் . தற்போது தளபதி விஜய் வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது .

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அனைவரும் இவரது ஒரு திரைப்படத்தில் ஆவது பணியாற்றி விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு தலைசிறந்த இயக்குனராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் . விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலும் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுக்க வைத்திருக்கிறது .

மேலும் லோகேஷ் கனகராஜ் யூனிவர்சல் என்ற யுக்தியின் மூலம் ஆங்கிலப் படங்களில் வரும் யுனிவர்சல் போலவே தமிழ் சினிமா விடும் புதிய ட்ரெண்டிங்கை கொண்டு வந்தவர் இவர் . தற்போது இவர் இயக்கி வரும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா. அர்ஜுன், இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் வெளியான இந்த திரைப்படத்தின் நான் ரெடி தான் என்ற பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

- Advertisement -

இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்து விட்டதாக சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன . மேலும் இந்தத் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது . படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் லியோ திரைப்படத்தின் எதிர்பார்ப்புகள் மேலும் ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது .

- Advertisement -

இது தொடர்பாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் ஆச்சரியம் அளிக்கும் வகையில் பதில் அளித்திருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யுமா என்று அவரிடம் கேட்டனர் . அதற்கு பதில் அளித்து பேசிய லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்று எனக்கு தெரியாது . ஆனால் ஒவ்வொரு ரசிகர்களும் இந்த திரைப்படத்திற்காக கொடுக்கும் டிக்கெட் விலை எனக்கு மிகவும் முக்கியம். . அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு இந்த திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். எனக்கு இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்வதை விட ஒவ்வொரு ரசிகனும் இந்த திரைப்படத்திற்காக செலவு செய்யும் 150 ரூபாய் முக்கியம் அதற்கு நியாயமாகவும் என்னுடைய 100 சதவீதம் உழைப்பையும் கொடுத்திருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்று தெரிவித்திருக்கிறார் .

Most Popular