Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமா2014ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ்- வீரம், ஜில்லா? எது அதிக வசூல்.. வெளிவந்த உண்மை

2014ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ்- வீரம், ஜில்லா? எது அதிக வசூல்.. வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகராக விளங்குபவர்கள் நடிகர் அஜித்தும் விஜயும் தான் இவர்கள் இருவரும் கடந்த பொங்கல் அன்று திரைப்பட வர்த்தகத்தில் யார் பெரியவர்கள் என மோதிக்கொண்டனர்.

- Advertisement -

இவர்கள் நடித்த துணிவு,வாரிசு திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதில் அதிக திரையரங்குகளை கொண்டு வெளியான துணிவு திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூலை பெற்றாலும் பிறகு வாரிசு அதிகளவு மக்களால் பார்க்கப்பட்டு தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு மோதல் ஏற்பட்டது. நடிகர் அஜித்தின் வீரமும், நடிகர் விஜய் மோகன்லால் நடித்த ஜில்லா திரைப்படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தது  இதில் எந்த படம் வெற்றி என்பது குறித்து இன்று வரை காரசார விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

- Advertisement -

அஜித் ரசிகர்கள் வீரம் தான் வெற்றி பெற்றதாகவும் வீரம் அதிக வசூலை பெற்றதாகவும் கூறினர். ஆனால் விஜய் ரசிகர்கள் ஜில்லா உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்றதாக போட்டி போட்டனர். இந்த நிலையில் பாக்ஸ் ஆபீஸ் சவுத் இந்தியா என்ற நிறுவனம் பழைய படங்களின் வசூலை அடிக்கடி போடுவதுண்டு.

- Advertisement -

அப்போது அதில் ரசிகர் ஒருவர் ஜில்லா வீரம் ஆகிய படங்களில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு அந்த நிறுவனம் அளித்துள்ள பதில் ஜில்லா தமிழகத்தில் மட்டும் 52 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலை பெற்றதாகவும், வீரம் 51 கோடியே 20 லட்சம் வசூலை பெற்றதாகும் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்று உலக அளவில் ஜில்லா 92 கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலை பெற்றதாகவும், ஆனால் வீரம் 77 கோடியே 5 லட்சம் ரூபாய் தான் வசூலை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகம் மற்றும் உலகம் எங்கும் வீரத்தை விட ஜில்லா தான் அதிக வசூலை பெற்றிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் இதனை ஒப்புக் கொள்ளாமல் கடுமையாக திட்டி வருகிறார்கள். இதுவரை விஜய் அஜித் மோதிய படங்களில் அஜித்தின் வில்லன் மற்றும் தீனா படங்கள் தான் விஜய காட்டிலும் அதிக வசூலை பெற்றெடுக்கிறது. மற்ற பந்தயங்களில் எல்லாம் விஜய் படங்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Most Popular