சினிமா

ஜெய்லர், தளபதி 67 உள்ளிட்ட பெரிய படங்களில் ரிலிஸ் தேதி இதோ!

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான ஆண்டாகவே அமைய பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸ் க்கு வெளியாகி உள்ள வாரிசு, துணிவு திரைப்படம் பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இரண்டு படங்களும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதால் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் வெளியாகியுள்ள மற்ற பெரிய படங்களின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வாத்தி மற்றும் செல்வராகவன் நடிப்பில் பகாசுரன் வெளிவர உள்ளது. சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்து ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பத்து தலை திரைப்படம் மார்ச் மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.
ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியில் பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

மே மாதம் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் திரைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.செப்டம்பர் மாதம் விக்ரமின் தங்கலான் படமும், அக்டோபர் மாதம் பூஜை விடுமுறை நாட்களில் மையமாக வைத்து தளபதி 67 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement

இதனை தொடர்ந்து நவம்பர் மாதம் தீபாவளி முன்னிட்டு இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதேபோன்று சூர்யாவும் சிறுத்தை சிவாவும் இணைந்துள்ள திரைப்படம் நடப்பாண்டிலே வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

தல 62 திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர விஜய் சேதுபதி வழக்கம் போல் இந்த ஆண்டிலும் ஏழு படங்களில் நடித்து அது ரிலீசாக உள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள ஜப்பான் திரைப்படமும் நடப்பாண்டில் பிற்பகுதியில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் வெற்றிமாறனின் விடுதலை 1 மற்றும் விடுதலை 2 திரைப்படமும் நடப்பாண்டிலே ரிலீஸ் ஆக உள்ளது.

Advertisement

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top