Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமா2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கிய படங்கள்

2023 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கிய படங்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவிற்கு 2022 ஆம் ஆண்டு பல வசூல் கொடுத்தது. சொல்லப்போனால் தமிழ் சினிமா வரலாற்றிலே 2022 ஆம் ஆண்டு தான் அதிக லாபத்தை கொடுத்தது என்று சொல்லலாம். வலிமை, பீஸ்ட், ட்ரிபிள் ஆர் ,விக்ரம் ,பொன்னியின் செல்வன், கே ஜி எஃப் 2 போன்ற திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படத்தில் வெளியாக உள்ள முக்கிய திரைப்படங்கள் குறித்து தற்போது காணலாம்.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பட்டாசு கொளுத்துவது போல் இரண்டு முக்கிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஜனவரி மாதம் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் நேருக்கு நேராக மோதுகிறது. பிப்ரவரி மாதம் எப்போதுமே டல்லான மாதமாக இருக்கும். இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மார்ச் மாதத்தில் சிம்புவின் பத்து தலை, சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரிலிசாக உள்ளது. மீண்டும் ஏப்ரல் மாதம் பல்வேறு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸ்க்கு காத்திருக்கிறது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் படமும் ,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள ஆடி புருஸ்  திரைப்படமும் கோடை விடுமுறையை மையமாகக் கொண்டு வெளியாக இருக்கிறது. அதேபோன்று சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வரும் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படமும் நடப்பாண்டில் ஆயுத பூஜை விடுமுறை மையமாகக் கொண்டு திரைக்கு வரலாம் என கருதப்படுகிறது.

- Advertisement -

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. தளபதி 62 திரைப்படமும் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதேபோன்று தல 62 படமும் இதே ஆண்டு திரைக்கு வரலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular