Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமா2023 ஆம் ஆண்டு இனி வெளியாக உள்ள டாப் படங்களின் ரிலீஸ் தேதி

2023 ஆம் ஆண்டு இனி வெளியாக உள்ள டாப் படங்களின் ரிலீஸ் தேதி

2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தற்போது வரை ஐந்து மாதங்கள் முடிவடைந்து விட்டது. இதில் பொன்னியின் செல்வன், வாரிசு, துணிவு போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் எஞ்சிய மாதங்களில் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள பெரிய பட்ஜெட் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

ஜூன் மாதம் இரண்டாம் தேதி ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள வீரன் என்ற சூப்பர் ஹீரோ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று ஜூன் 28ஆம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பகத் பாஸில்,வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்,கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதேபோன்று ஜூலை மாதம் 4 பெரிய ஹீரோக்களின் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.இதில் ஜெயம் ரவி நடித்த இறைவன், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன், பல ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம், விஷால் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.

- Advertisement -

ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் திரைப்படம் திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ஷாருக்கான் அட்லி, விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ள ஜவான் திரைப்படமும், செப்டம்பர் 15ஆம் தேதி ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி படத்தின் பாகம் 2 ஆகியவை ரிலீஸ் ஆக உள்ளது.

செப்டம்பர் 28-ம் தேதி பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படமும் அக்டோபர் 19ஆம் தேதி நடப்பாண்டின் மிகப்பெரிய திரைப்படமாக கருதப்படும் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. இதே போன்ற நவம்பர் மாதம் தீபாவளி முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அயலான், ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்,கார்த்தி நடித்துள்ள ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது.இதேபோன்று டிசம்பர் மாதம் விக்ரம் நடித்துள்ள அயலான் திரைப்படமும் தனுஷ் நடித்துள்ள கேப்டன் திரைப்படமும் ரிலீஸ் ஆகவிட்டது.

Most Popular