நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனால் துணிவு படம் ஏன் பிளாக்பஸ்டர் வசூல் சாதனை படைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். அஜித்தின் கடந்த படமான வலிமை கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனால் வினோத் ,அஜித் கூட்டணி ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் களம் இறங்கி உள்ளது.
இதற்கு முன்னாள், அஜித்தும் சிறுத்தை சிவாவும் இணைந்து விவேகம் என்ற படத்தை கொடுத்தனர்.அது தோல்வி படமாக அமைந்ததால், அதன் பிறகு விசுவாசம் என்ற படத்தில் இணைந்து மெகா ஹிட் கொடுத்தனர். இதனால், இதே போன்று எச் வினோத் துணிவு படத்தை பிளாக்பஸ்டராக கொடுத்து தான் பிரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தின் அளவு வெறும் இரண்டு மணி நேரம் 22 நிமிடங்கள் வரை தான்.
இதனால் படத்தின் கதை விறுவிறுப்பாக அமைய வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு வலிமை திரைப்படம் நீளம் அதிகமாக இருந்தது. பிறகு ரசிகர்கள் விமர்சனத்தை அடுத்து படத்தின் நீளத்தை இயக்குனர் வினோத் குறைத்தார் .அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது சிறிய படத்தை அவர் வழங்கியிருக்கிறார். இரண்டு மணி நேரம் 22 நிமிடம் தான் படம் ஓடும் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிக காட்சிகளை போட ஏதுவாக இருக்கும். துணிவு திரைப்படத்தில் முக்கிய வெற்றியாக அமையப்போவது அஜித்தின் லுக்கும், அவருடைய பேச்சும் தான். வலிமை படத்தில் அஜித் பேசுவது பார்வையாளருக்கு புரியவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.
ஆனால் இதில் அஜித் தூக்குதுரை, வேதாளம் கணேஷ் போல் கலகலவென பேசி இருக்கிறார். எனினும் ரசிகர்கள் எதிர்பார்த்தது விநாயக் மகாதேவ் தான் என்றாலும் தூக்குதுரையே நல்லாக தான் இருக்கும் என்பது அஜித் ரசிகர்களின் விருப்பம். இதே போன்று அஜித்தின் மேனரிசம், வங்கிக் கொள்ளையில் போது ஆடும் நடனம் என அனைத்தும் அவரின் நெகட்டிவ் கேரக்டர்களை வெளிப்படுத்துகிறது. அஜித் எப்போதெல்லாம் நெகட்டிவ் கேரக்டர் செய்கிறாரோ அது ப்ளாக்பஸ்ட்டராக அமையும்.
மூன்றாவது விஷயம் வலிமை படத்தின் டிரைலரை முழு கதையும் வினோத் சொல்லி இருப்பார். ஆனால் துணிவு படத்தில் வெறும் வங்கி கொள்ளை நடக்கிறது என்று மட்டும் தான் சொல்லி இருக்கிறார். அதன் முன் கதை என்ன ? பின் கதை என்ன எதையும் அவர் விளக்கவில்லை.இதில் ஏதாவது ஒரு டிஸ்ட் வைத்திருந்து அது ஓர்க் அவுட் ஆனால் நிச்சயம் அது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கும். முக்கியமாக அம்மா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு ,தமிழ் என் தங்கச்சியே கிடையாது போன்ற வேலைக்கே ஆகாத சென்டிமேண்ட் படத்தில் இல்லை என்பது கூடுதல் பலம். இதனால் ரசிகர்கள் தைரியமாக பொங்கலுக்கு துணிவு படத்தை பார்க்கலாம்.