சினிமா

67வது பிலிம் ஃபேர் விருது: கிட்டத்தட்ட அனைத்து விருதுகளையும் அள்ளிக்குவித்த சூரரைபோற்று, புஷ்பா திரைப்படங்கள்! முழு பட்டியல் உள்ளே..

தென்னிந்திய திரைப்படங்களுக்கான 67வது பார்லெ பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா பெங்களூரில் நடத்தப்பட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகின் மிகச் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்தவர்களை தேர்வு செய்து விருதுகளும் வழங்கப்படும்.

இந்த விழாவில், கோலிவுட்டில் சிறந்த படமாக ‘ஜெய் பீம்’ மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதை சுதா கொங்கரா ‘சூரரை போற்று’ படத்திற்காகவும், சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா ‘சூரரை போற்று’ படத்திற்காகவும், சிறந்த நடிகை நிஜமோல் ஜோஸ் ‘ஜெய்பீம்’ படத்திற்காகவும், சிறந்த நடிகர் விருதை (கிரிட்டிக்ஸ் தேர்வில்) ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்திற்காகவும், சிறந்த நடிகை விருதை (கிரிட்டிக்ஸ்) அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்திற்காகவும், சிறந்த துணை நடிகர் விருதை பசுபதி சார்பாட்டா பரம்பரை படத்திற்காகவும், சிறந்த துணை நடிகை விருதை ஊர்வசி சூரரைப்போற்று படத்திற்காகவும், சிறந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சூரரைப்போற்று படத்திற்காகவும் பெற்றனர்.

Advertisement

சிறந்த பாடல் ஆசிரியர் விருதை அறிவு ‘நீயே ஒளி’ (சார்பட்டா) பாடலுக்காகவும், சிறந்த பாடகர் விருதை கோவிந்த் வசந்த் ‘ஆகாசம்’ (சூரரை போற்று) பாடலுக்கும், சிறந்த பாடகி தீ ‘காட்டுப்பயலே’ (சூரரைபோற்று) பாடலுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை நிகேத் பொம்மிரட்டி ‘சூரரைப்போற்று’ சிறந்த நடன அமைப்பாளர் தினேஷ் குமார் வாத்தி கம்மிங் (மாஸ்டர்) பாடலுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை பெற்றனர்.

மேலும் தெலுங்கு திரையுலகில் புஷ்பா-தி ரைஸ் படம்: சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த பாடகர் (ஸ்ரீவள்ளி), சிறந்த ஒளிப்பதியாளர், சிறந்த பாடகி, சிறந்த இசை அமைப்பாளர் என ஏழு பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது. மேலும் அல்லு அர்ஜுனனின் ‘ஆளாவைகுந்த புரம்லோ’ திரைப்படம் மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

Advertisement

நடிகை சாய் பல்லவி ‘லவ்ஸ்டோரி’ படத்திற்கான சிறந்த நடிகை மற்றும் சிறந்த நடிகை (கிரிட்டிக்ஸ்) விருதை ஷாம் சிங் ராய் படத்திற்காகவும் பெற்றுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top