நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் சரியாக போகவில்லை என்றும் ஆனால் அந்த படம் வசூல் ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் நடிகர் ரஜினி பேசிய பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் ஜெய்லர் பட இசை வெளியீட்டு விழாவில் பீஸ்ட் திரைப்படத்தில் கேரக்டரை நெல்சன் சரியாக தேர்வு செய்யவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்த அன்பு அறிவு அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை எடுத்துள்ளது.
பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே சரியாக போகாததற்கு காரணம் என்ன என்பது குறித்து அன்பறிவு பேசினார்.அதில் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் படத்தில் நடிக்கும் போது அதற்கு வில்லன் பலமானவராக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தான் அந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் பீஸ்ட் திரைப்படத்தில் அப்படி எந்த ஒரு வில்லனும் இல்லை.இதனால் வில்லனை மாற்றுங்கள் என நாங்கள் நெல்சன் இடம் கூறியிருந்தோம்.
மேலும் விஜய் போன்ற ஒரு மாஸ் நடிகர் வில்லனிடம் சோலோபைட் போட வேண்டும் என்றும் நெல்சன் இடம் நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு நெல்சன் இது போன்ற பல ஆக்ஷன் படங்களையும் சண்டை காட்சிகளிலும் நடித்து விட்டார்.
அவர் செய்யாததே இல்லை. இதனால் நான் விஜய்யை வேறுவிதமாக காட்ட வேண்டும் என எண்ணியிருந்தேன்.என்னுடைய மனதில் நான் என்ன நினைத்தேனோ அதை தான் காட்ட விரும்புகிறேன்.
இது சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் அது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எனக்கு நான் நினைத்த மாதிரி தளபதி விஜய் காட்ட வேண்டும் என நெல்சன் பிடிவாதமாக கூறிவிட்டதாக அன்பறிவு தெரிவித்திருந்தார்கள். இதனால் தாங்களும் நெல்சன் பேச்சு கேட்டு நடந்தோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.