தமிழ் திரையுலகில் ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னால் பல எதிர்பார்ப்புகள் கிடக்கின்ற. சிலர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வர் மற்ற சிலர் அதைத் தக்க வைக்க தவரிவிடுவர். படக்குழு அவ்வப்போது எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் சர்ப்ரைஸாக அப்டேட்டை கொடுத்துவிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகிவிடுவர்.
அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வீசியுள்ளார். தன் சமூக வலைதள பக்கத்தில் அடுத்ததாக அவர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஓர் பாடலை உருவாக்கவிருப்பதை ஓர் குட்டி வீடியோ மூலம் அறிவித்தார்.
லாக்டவுனுக்குப் பிறகு ஓர் பெரிய அறிவிப்புக்கு முன்னால் அதை ஓர் புரோமோவாக வெளியிட்டு மக்களின் கவனத்தைப் பெறுவதை ஓர் தந்திரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை ஓர் ட்ரெண்டாக கொண்டு சென்றது நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் என்றே கூறலாம். யுவனும் இதே போல ஓர் வீடியோவை வெளியிட்டார்.
யுவன் – அனிருத் காம்போ
சில தினங்களுக்கு முன்னர் யுவன் தன் டிவிட்டர் பக்கத்தில், “ அடுத்து தான் யாருடன் இணைந்து பாடல் செய்ய வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள் ? ” என பதிவிட அதற்கு கமெண்ட்டில் பல ரசிகர்கள் அனிருத்தின் பெயரை குறிப்பிட்டனர். இந்த பதிவையும் கமெண்ட்டையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனிருத்துக்கு அனுப்பி “ என்ன ப்ரோ ரசிகர்களின் ஆசைப்படி இணையலாமே ” என மெசேஜ் செய்து கேட்பது போல புரோமோ எடிட் செய்யப்பட்டிருந்தது.
அதற்கு அனிருத், “ நிச்சயமாக, அடுத்த யுவன் ட்ரக் லோடிங்க் ” என ரிப்ளை செய்ய யுவன், “ லெட்ஸ் பிளாஸ்ட் ” என கூறி வீடியோவை நிறைவு செய்தார். இந்த வீடியோ இரு தரப்பு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் இணையும் அடுத்தப் பாடல் எந்த படம் என எந்த ஒரு அறிவிப்பும் கிடைக்கவில்லை.
யுவனும் அனிருத்தும் இணைவது இது மூன்றாவது முறையே. முதல் முறை யுவனின் பலூன் படத்தில் ‘ ஷட் அப் பண்ணுங்க ’ எனும் பாடலை அனிருத் பாடினார். அடுத்து அனிருத்தின் இசையில் மாஸ்டர் படத்தில் ‘ அந்தக் கண்ணப் பாக்காத ’ பாடலை யுவன் பாடியிருந்தார். தற்போது மீண்டும் யுவனுக்காக அனிருத் பாட ஒத்துழைக்கிறார்.