சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு- விடுகதையா இந்த வாழ்க்கை???? என்று விநியோகஸ்தர்களை புலம்பவிட்ட நம்ம பருந்தின் சில சமீபகால திரைப்படங்கள் குறித்து தான் பார்க்க போகிறோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி போன்ற நட்சத்திரங்கள் பாபா திரைப்படத்தில் நடித்தனர்.
ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்தார். ரஜினிகாந்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டான பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கினார்.மிகுந்த மகிழ்ச்சியோடு அடுத்த மிகப்பெரும் மாஸ் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை இப்படம் தந்தது.
மாசாக இல்லை என்றாலும் ஜஸ்ட் பாஸ் ஆக கூட இப்படம் இல்லாமல் போனது பெறும் வருத்தத்தையே வந்தது.அடுத்ததாக அனிமேஷன் தொழில்நுட்ப முறையில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் கோச்சடையான். இதில் ரஜினியுடன் இணைந்து தீபிகா படுகோனே, ஆதி, நாசர் ,ஷோபனா போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர்.
இப்படத்திற்கும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். தன் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்க ரஜினிகாந்த் நடித்தார். ஆனால் அது செயற்கையான படமாகவே மக்களால் பார்க்கப்பட்டது. ரஜினிகாந்தின் வெற்றி படங்கள் பலவற்றை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் இப்படத்திற்கு கதை அமைத்திருந்தார்.
இசை திரைக்கதை நடிப்பு அனைத்தும் அபாரமாக இருந்தாலும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட இதிகாச திரைப்படமான கோச்சடையான் மக்களிடையே கோலோச்சாமல் போனது துரதிஷ்டமே.
அடுத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 120 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட் படமான லிங்கா திரைப்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த் மேலும் இப்படத்தில் அனுஷ்கா செட்டி, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்தனர்.
இத்திரை கதையில் சோலையூர் என்ற கிராமத்திற்கு வந்து, தன் தாத்தா கட்டிய பாலத்தை காப்பாற்றுவார் ரஜினி.
தாத்தா கட்டிய பாலத்தை காப்பாற்றினாலும் ரசிகர்களின் நம்பிக்கை பாலம் சுக்கு நூறாக தகர்ந்தது.
குசேலன் என்ற படத்தில் நட்புக்காகவே நடித்திருந்தார் ரஜினிகாந்த். இப்படத்தில் நடிகர் பசுபதி மீனா வடிவேலு போன்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் ஆகவே நடித்திருந்தார் ரஜினி.. அனைவரின் நடிப்பும் வடிவேலுவின் காமெடியும் சிறப்பாக அமைந்தாலும் ரஜினியின் பாணியில் படம் இல்லாததால் ரசிகர்கள் தன் பாணியில் கிளைமேக்ஸ் எழுதிவிட்டனர்.
காலா மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை எதார்த்தமான பாணியில் விளக்கும் திரைப்படமாக அமைந்தது.இப்படத்தைப் புரட்சி இயக்குனர் ரஞ்சித் இயக்க தனுஷ் இப்படத்தை தயாரித்தார். நானா படேகர், ஈஸ்வரி ராவ் ,ஹீமா குரேசி,போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்தனர்.
தாராவியை கதைக்களமாக கொண்டு நாயகன் படம் வெற்றி பெற்றதை போல் இப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்கள் காலா! நீ எல்லாம் ஒரு ஆளா??? இன்று விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர்.எது எப்படி இருந்தால் நமக்கென்ன என்று நம்ம தலைவர் மேலே மேலே பறந்து சென்று கொண்டிருப்பது முற்றிலும் உண்மை.