நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெய்லர் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் ரஜினியின் லுக்,படம் எடுக்கப்பட்ட விதம் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும் முன்பெல்லாம் ஒரு படம் எவ்வளவு நாட்கள் திரையரங்கில் ஓடுகிறது என்பதை வைத்து வெற்றியை தீர்மானிப்பார்கள். தற்போது யூடியூபில் ஒரு டிரைலர் முதல் நாளில் எத்தனை பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதெல்லாம் வைத்து யார் பெரிய நடிகர்கள் என்று கூறுகிறார்கள்.
இந்த நிலையில் ஜெய்லரின் ட்ரெய்லர் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் அது 22 மணி நேரத்தில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டது. ஆனால் இதுவே விஜய் நடித்த நெல்சன் இயக்கத்தில் உருவான பீஸ்ட் படத்தின் டிரைலர் சுமார் மூன்று கோடி பேர்களால் 24 மணி நேரத்தில் பார்க்கப்பட்டது.
அதேபோன்று ஒரு ட்ரெய்லர் வெளிவந்தவுடன் அது எத்தனை மணி நேரத்தில் பார்வையாளர்களை அதிகமாக ஈர்க்கிறது என்றும் ரெக்கார்டுகள் வகுக்கப்படுகிறது. அதன் பொருத்தவரை ஜெயிலர் திரைப்படம் அரை மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. ஆனால் பீஸ்ட் திரைப்படம் இந்த ரெக்கார்டை 5 நிமிடத்தில் படைத்தது.
தற்போது வரை அதிக பார்வையாளர்களை ஈர்த்த டிரைலர் என்ற பெருமையை பீஸ்ட் பெற்று இருக்கிறது. பீஸ்ட் மூன்று கோடி பார்வையாளர்களையும், 22 லட்சம் லைக்குகளையும் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் துணிவு 2 கோடியே 30 லட்சம் பார்வையாளர்களையும் 15 லட்சம் லைட்ஸ் களையும் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மூன்றாம் இடத்தில் விஜயின் வாரிசு திரைப்படம் இருக்கிறது. நான் ரெடி பாடலை விட காவலா பாடலுக்கு அதிக பார்வையாளர்கள் பெற்றதாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடினர்.
ஆனால் இந்தப் பாடலை தமன்னா இருந்ததால் தான் அந்த அளவுக்கு பார்வையாளர்களை அது பெற்றதாகவும், தற்போது ஜெய்லர் டிரைலரின் தமன்னா ஒரு காட்சியில் கூட இல்லாததால் இந்த ட்ரெய்லரை பலரும் பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.