Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாடிரைலர் ஒஹோனு இருந்து மொக்கையான படங்கள்..!

டிரைலர் ஒஹோனு இருந்து மொக்கையான படங்கள்..!

ட்ரெய்லரிலோ ஜம்பம்- தியேட்டரிலோ பங்கம்.
பாம்பு கூட நன்றாக படம் எடுத்து  இருக்கும் என்று பங்கமாக கலாய்க்கப்பட்ட திரைப் படங்கள் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம்.தளபதி விஜய் நடிப்பில், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சு தீப், பிரபு ,தம்பி ராமையா என்று திரை நட்சத்திரங்களுக்கு பஞ்சமின்றி குவிந்து நடித்த திரைப்படம் புலி.

- Advertisement -

தியேட்டரில் படம் பார்த்தவர்களை விட ஃப்ரேமில் இருந்தவர்களே அதிகம்!!அனைவர் மனதையும் கொள்ளை கொண்ட வடிவேலுவின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கியவர் சிம்புதேவன்.. இன்று வரை மீம்ஸ்களுக்கு தீனி போட்டு வருகிறது 23ஆம் புலிகேசி யின் காட்சிகள் என்றால் அது மிகையாகாது..

குழந்தை ரசிகர்களின் தளபதியான விஜய் தன் குட்டி ரசிகர்களை ஈர்க்கும் வகையில்  புலி படத்தை தேர்வு செய்து நடித்தார்.புலி வருது புலி வருது என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள் அதிலும் குழந்தைகளோ பேராவலுடன் காத்திருந்தனர்.ஆனால் அதன் பிறகு புலி வந்து விட்டது என்று தியேட்டரை விட்டு வெளியே ஓடும் அளவிற்கு அமைந்தது புலி படம்.

- Advertisement -

சின்னத்திரையில் முடி சூடா மன்னனாக இருந்து தான் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் எதுவானாலும் அதில் எந்த குறையும் இல்லாமல் மக்களளை மகிழ்விப்பார் எஸ் கே என்று செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன்.அவருடைய திறமையை கண்டு நடிகர் தனுஷ் தன் படம் நிறுவனத்தில் நாயகனாக அறிமுகம் செய்தார்..

- Advertisement -

நகைச்சுவை நடிகர் நாகேஷ் நடித்து பெரும் வெற்றி அடைந்த எதிர்நீச்சல் படத்தின் பெயரே கோ இன்சிடென்ட் ஆக சிவகார்த்திகேயனுக்கும் அமைந்தது. அதன் பிறகு ஏறுமுகத்தையே கண்டார் சில கார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,நம்ம வீட்டு பிள்ளை, வேலைக்காரன், மான் கராத்தே போன்ற படங்கள்  மாபெரும் வெற்றி பெற்றன…

தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் மரியா என்ற வெளிநாட்டு நடிகையுடன் இணைந்து நடித்தார் எஸ் கே. சத்யராஜ் இப்படத்தில் இணைந்ததும் பெரும்பலமாகவே கருதப்பட்டது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த படத்தில் பாகுபலி திரைப்படத்தில் வருவது போல் இளவரசரான அமேந்திர பாகுபலி போல் மகுடம் சூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வா தேவனின் மகன் போல் இருந்த இடம் தெரியாமல் போனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது நடிகர் சங்கத்தின் முக்கால்வாசி பேர் நடித்து இமான் இசையமைத்தார்..
கீழடியில் இன்னும் பத்து அடி தோண்டி இருந்தால் இப்படத்தின் கதை ஓலைச் சுவடிகளில் இருந்திருக்கும் என்று கலாய்த்து வந்த செய்திகள் நகைச்சுவையின் உச்சபட்சம்.

அந்த அளவுக்கு அண்ணன் தங்கை சென்டிமென்ட்டை பிழிந்து தந்திருந்தனர்.ரஜினி ரசிகர்களாலேயே அதை தாங்க முடியாமல் போனது என்னமோ மறுக்க முடியாத உண்மை.
தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தாலும் அப்படியே அதை ஏற்றுக் கொண்டு தலை என்றாலே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டிய படம் விவேகம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் காஜல் அகர்வால் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்தது விவேகம். நம்ம தோல்வியை நாமே ஒப்புக்கொள்ளும் வரை நாம் விடக்கூடாது என்று ட்ரெய்லரில் ஆர்ப்பரித்து ஆவலை தூண்டினார்கள்.

படம் வந்த பிறகு தான் தெரிந்தது  தலைப்பில் மட்டுமே விவேகம் இருக்கிறது. படத்தில் சிறிதளவாவது இருந்திருக்கலாம் என்று லாஜிக்கே இல்லாத படமாக ரசிகர்களை வெறுப்பேற்றியது..சிறுத்தை சிவாவோ பாய்ஸ் பட பாடலைப் போல் தான் எடுத்த படங்களில் இருந்து கால் கிலோ கால் கிலோ என போட்டு பெரிய பொட்டல மாக கட்டி ரசிகர்கள் தலையில் போட்டு என்ன கொடுமைய்ய்யா  இது??? என்று ரசிகர்களை புலம்பவிட்டார்.

கமல்ஹாசனுக்கு அடுத்து சகலகலா வல்லவன் ஆக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடிகர் விக்ரமின் கோப்ரா படம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இரண்டு வேடங்களில் விக்ரம் நடித்து ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பத்தான், போன்ற நட்சத்திரங்கள் இணைந்தனர்..

இர்பான் பதானும் கிளீன் போல்ட் ஆனார்.. இப்படத்தின் ஒரே ஆறுதல்  இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை தான்.. ஆதிரா, தும்பித்துள்ளல் போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்களை தியேட்டருக்குள் ஈர்த்தனர்…மூன்று மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டுமென்றால் கோபுர படத்திற்கு செல்லுங்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது.! கதை என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் ரசிகர்கள்  தவித்தனர்.கோப்ரா கொத்தியது என்னமோ ரசிகர்களின் நம்பிக்கையைத் தான்!!!!!

Most Popular