கொரோனா காலகட்டத்தில் சினிமா உலகமே முடங்கி கிடந்தது எந்த படப்பிடிப்பும் இருக்க முடியாமலும் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. சினிமாத்துறை மட்டுமல்ல பல துறைகளும் இதுபோன்று பாதிக்கப்பட்டு இருந்தது.
தன் பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் தொடர்பு கூட இல்லாமல் இருந்த அந்த நாட்களில் பலரை புதியதாக இணைத்து வைத்தது பேஸ்புக் வாட்ஸ் அப் ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்கள் தான்.
அப்படி வாட்ஸ் அப் மூலம் ஒரு நட்பு கூட்டமே உருவாகி இருக்கிறது. சினிமா துறையில் திரைப்படங்களை இயக்க முடியாத நிலையில் வாட்ஸ் அப் மூலம் இருக்கிறார்கள் இயக்குனர் மணிரத்னம், ஷங்கர் ,லோகேஷ் கனகராஜ், லிங்குசாமி சசி சுப்புராஜ் போன்ற இயக்குனர்கள்.
இப்படி மலர்ந்த இந்த whatsapp நட்பை தற்பொழுது ஒருவரோடு ஒருவர் சந்தித்து விருந்து உபசரிப்பு செய்யும் வரை வளர்ந்து இருக்கிறது .அதாவது மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவாக இருந்து தற்பொழுது நிஜமாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருடைய மிகப்பெரிய சாதனையாகும்.
எத்தனையோ மாசான நடிகர்கள் இருக்கும்பொழுது அந்தக் கதைக்கு பொருத்தமானவர் யார் என்பதை தேர்வு செய்து மிக அழகாக இருக்கிற நாவலையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தந்தவர். இயக்குனர் மணிரத்தினம் பொதுவாகவே இவருடைய திரைப்படங்களில் காதல் பல கோணத்தில் காட்டப்பட்டிருக்கும்.
மௌன ராகம், உயிரே,ரோஜா,ஓகே கண்மணி ,காற்று வெளியிடை இப்படி எல்லா திரைப்படங்களிலும் வெவ்வேறு மாதிரியான காதலை காட்டும் வல்லமையுள்ள இயக்குனர் என்றால் அது நிச்சயம் மணிரத்தினம் தான். இவர் தற்பொழுது உலக நாயகன் கமலஹாசனின் வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் இதற்கு முன்பு 1998இல் இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த நாயகன் திரைப்படம் எண்ணிலடங்கா வெற்றியைப் பெற்று இன்றுவரை பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.
மீண்டும் இவர்களுடைய இணைப்பு எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினம் தன் நண்பனாகிய சங்கரின் சினிமா பயணம் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கிறது.
இதனால் அதைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இயக்குனர் மணிரத்தினம் தன் வீட்டிற்கு இயக்குனர் சங்கரையும் மேலும் அவருடைய நண்பர்களாகிய லோகேஷ் கனகராஜ், சசி, லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ் ,கௌதம் வாசுதேவ் மேனன், ஏ ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்களையும் அழைத்து விருந்தளித்து இருக்கிறார்.
அப்பொழுது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். மேலும் எங்களை அழகாக உபசரித்து சுகாசினி அவர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல இந்த விருந்தில் கார்த்திக் சுப்புராஜ் ஏஆர் ரகுமான் மற்றும் இளையராஜாவின் பாடல்களை பாடி எங்களை எல்லாம் மகிழ்வித்தார் என்றும் அது மிக அருமையாக இருந்தது என்றும் குறிப்பிட்டது. இப்படி ஒரு மாலை பொழுது எங்களுக்கு தந்ததற்கு நன்றி என்றும் இயக்குனர் சங்கர் தன்னுடைய இன்ஸ்டா பேச்சு குறிப்பிட்டிருந்தார்.