Friday, November 1, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் டிக்கெட் முன்பதிவு எப்படி இருக்கு? - அண்ணாத்தவால் வந்த வினை

ஜெய்லர் டிக்கெட் முன்பதிவு எப்படி இருக்கு? – அண்ணாத்தவால் வந்த வினை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகம் முழுவதும் நேற்று இரவு தொடங்கிவிட்டது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் கழித்து நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

- Advertisement -

இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஜெயிலர் படத்தின் பாடலும் டிரைலரும் ஹிட் ஆனதால் இந்த படம் நன்றாக ஓடும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் தோல்வி ஜெயிலர் படத்திலும் எதிரொலித்திருக்கிறது தற்போது தெரியவந்துள்ளது.

பொதுவாக விடுமுறை தினமாக இருந்தாலும் சரி இல்லை வேலை நாட்களாக இருந்தாலும் சரி அஜித், விஜய் படங்கள் திரைக்கு வந்தால் அது உடனடியாக டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்படும். மேலும் டிக்கெட் கிடைப்பது கடினமாக மாறிவிடும்.

- Advertisement -

ஆனால் ஜெயிலர் திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் காலியாக தான் இருக்கிறது.பெரும்பான்மையான திரையரங்குகளில் பாதி அளவு தான் முதல் இரண்டு காட்சிகளுக்கு இருக்கை நிரப்பப்பட்டிருக்கிறது. மற்ற காட்சிகளுக்கு டிக்கெட் இன்னும் கிடைக்கிறது.

- Advertisement -

இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் திரையரங்கு உரிமையாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.இதுவே பழைய ரஜினி படங்கள் என்றால் பத்து நாட்களுக்கு திரையரங்கம் பக்கமே போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். மற்ற பழைய ரஜினி படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது டிக்கெட் விற்கும் வேகம் மிகவும் குறைவு தான் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் 72 வயது நடிகர் ஒருவருக்கு இவ்வளவு டிக்கெட்டுகள் விற்கப்படுவது நிச்சயம் ஆச்சரியம் தான். ஏனென்றால் பாலிவுடில் அமிதாப்பச்சன் எல்லாம் படமே கிடைக்காத நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் டாப் ஹீரோக்களுடன் போட்டி போடுவது நிச்சயம் பாராட்டத்தக்க விஷயமாகும்.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் முந்தைய படமான அண்ணாத்தவின் தோல்வி ஆகியவை காரணமாக ஜெயிலர் படத்தின் முன்பதிவு கொஞ்சம் மந்தமாக இருப்பதாகவும் படத்தின் விமர்சனம் சிறப்பாக இருந்தால் ஜெயிலர் படத்தின் டிக்கெட் வேகமாக விற்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

Most Popular