இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. ஜனவரி மாதம் மிகப் பெரிய பட்டாளத்துடன் துவங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டது. தற்போது படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மிகவும் பிஸியாக உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு உலகெங்கும் ரீலீஸ் ஆகிறது.
கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் முடிவில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து கைதி படத்தை உள்ளே இழுத்து தனக்கென்று ஓர் யுனிவர்ஸை உருவாக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்த எல்.சி.யூவில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படம் வருமா இல்லையா என்பதைப் பற்றி எந்த வித தகவலும் படக்குழு கொடுக்கவில்லை.
இரு மாதங்களுக்கு முன்பு அது குறித்து கமல்ஹாசன், மகேந்திரன், லலித் குமார் மற்றும் சில தயாரிப்பாளர்கள் இணைந்து பேசியுள்ளனர். அதன் முடிவையும் அவர்கள் வெளியிடவில்லை. தற்போது லியோ படத்தின் ரீலீஸ் குறித்த ஓர் தரமான செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.
லியோ படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்களை வைத்து விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் என ரசிகர்கள் கற்பனை செய்து கொண்டிருக்க வேளையில் லோகேஷ் கனகராஜ் அதையும் தாண்டி படத்தையே டபுளாக வெளியிட திட்டமிட்டுள்ளார். இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இந்தப் செய்தியை அனைத்து சினிமா நிருபர்களும் உறுதி செய்துள்ளனர்.
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் அடுத்தப் பாகத்தின் டீஸராக அமையும் எனக் கூறுகின்றனர். லியோ பார்ட் 2 வெளியாவதில் தாமதம் உள்ளது. இரண்டாவது பாகத்தை 2025 – 2026இல் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கு இடையில் தான் கைதி 2 மற்றும் விக்ரம் 2 ஆம். அப்படியானால் லியோ படமும் எல்.சி.யூவில் வருவது உறுதி தான்.
இது தான் விஜய்யின் முதல் 2 பாகம் கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி விஜய் ரசிகர்களை வானில் பறக்க வைத்துள்ளது. லியோவில் விஜய்யுடன் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என பெரிய பட்டாளமே நடிக்கிறது. ஏற்கனவே எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருக்கும் வேளையில் இந்தச் செய்தி எதிர்பார்ப்பை இன்னும் கூட்டுகிறது.