தமிழ் சினிமாவில் வெறும் எதிர்பார்ப்புக்கு இடையே ஜெய்லர் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் ஒளிபரப்பானது. ஆனால் மற்ற மாநிலங்களில் அதிகாலை 6:00 மணிக்கு முதல் காட்சி போடப்பட்டது.
இந்த நிலையில் ஜெய்லர் திரைப்படத்தின் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் ரஜினி அண்ணாத்த தோல்விக்கு பிறகும் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் அடி வாங்கியதற்கு பிறகும் தற்போது ஜெய்லர் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும் இரண்டாவது பாதி கொஞ்சம் தொய்வாக இருந்தாலும் மோகன்லால் ,சிவகுமார் போன்ற நடிகர்களின் வருகை மற்றும் மாஸ் சீன்கள் படத்தை காப்பாற்றி விட்டதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஜெயிலர் படத்தில் இன்று முதல் பாதி, இண்டர்வெல் மிரட்டும் வகையில் இருப்பதாகவும் படத்தின் கிளைமாக்ஸ்சும் சிறப்பாக வந்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனிருத் இசை ஜெயிலர் படத்திற்கு முதுகெலும்பு போல் இருப்பதாகவும் படத்தை தூக்கி நிறுத்தி இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாதையில் கொஞ்சம் தொய்வு இருப்பதாகவும் அதனை மட்டும் சரி செய்து இருந்தால் பணம் இன்னும் வேற லெவலுக்கு சென்று இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமன்னா மற்றும் சுனில் வரும் காட்சிகள் தேவையில்லாத ஆணி என்றும் அதனை நெல்சன் அப்படியே நீக்கி இருக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிக்கு கபாலிக்கு பிறகு இது ஒரு நல்ல திரைப்படமாக வந்திருப்பதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.
படம் ஆக ஒஹோ என சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும் சுத்த வேஸ்ட் என்றும் சொல்ல முடியாது என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள். மொத்தத்தில் ஜெய்லர் திரைப்படம் ரஜினிக்கும் நெல்சனுக்கும் கம் பேக் கொடுத்து இருக்கிறது.