சன் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிநடை போடுகிறது. நான்கே நாட்களில் உலகெங்கும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது.
தன் முந்தைய படமான பீஸ்ட் சரியாக போகாததால் நெல்சனின் மேல் மிகுந்த குற்றச்சாட்டுகளும் வெறுப்பும் திணிக்கப்பட்டது. அனைத்திற்கும் அவர் தரமாக பதிலளித்துள்ளார். வெளியீட்டுக்கு பின் இயக்குனர் நெல்சனின் நேர்காணல் பேச்சுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியது.
அப்படியான நேர்காணல் ஒன்றில் அதிரடியான விருப்பத்தை தெரிவித்துள்ளார். இது ஒரு குழுவை குஷியில் தள்ளினாலும் மற்றொரு ரசிகர் படையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நெல்சன் கூறியதாவது, “ ஜெயிலர் பார்ட் 2 எடுக்கும் திட்டம் உள்ளது. அதே சமயம் நான் இதுவரை இயக்கிய நான்கு படங்களின் இரண்டாம் பாகதையும் இயக்க விரும்புகிறேன். ரஜினிகாந்த் – விஜய் இருவரையும் ஒன்றாக வைத்து ஓர் படம் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை ” என்றார்.
நெல்சன் இதுவரை இயக்கிய படங்கள் கோலமாபு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகும். இதில் பீஸ்ட் தவிர அனைத்துமே நல்ல.வரவேற்பை பெற்றது. குறிப்பாக முதல் 2 படங்கள். பீஸ்ட் பார்ட் 2 வரும் என்றால் விஜய் ரசிகர்கள் தெறித்து ஓடிவிடுவர். அவ்வளவு வெறுப்பை ஏற்கனவே நெல்சன் மேல் காட்டியுள்ளனர்.
அவரின் நான்கு படங்களில் முதல் 2 படங்களில் பெரிய நட்சத்திரங்களுக்கு தேவையான மாஸ் காட்சிகள் இல்லாததால் நெல்சன் எந்தவித அழுத்தமும் இல்லாமல் முழுக்க முழுக்க அவரது பாணியில் படம் செய்தார். சூப்பர்ஹிட்டும் ஆனது. அவர் டாப் நடிகர்கள் இல்லாமல் பழைய வகையில் படம் செய்தாலே இன்னும் கொண்டாடப்படுவார்.
நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட இயக்குனர் அவரது வலுவை இழக்காமல் தேவையான நடிகர்களிடம் அணுகி திரைப்படம் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். அடுத்ததாக நெல்சன் அவரின் முதல் படமாக அமைந்திருக்க வேண்டிய சிம்புவின் வேட்டைமன்னனை மீண்டும் தொடர இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன, பொறுத்திருந்து பார்ப்போம்.