அஜித் திரைப்பட இயக்குனரால் விஜயின் திரைப்படம் நின்று போன சம்பவம் தற்போது வெளிவந்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு விஜய் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அப்போது தனக்கு பிடித்த இயக்குனர் ஒருவருக்கு படம் செய்வதாக விஜய் ஒப்பு கொண்டுள்ளார்.
அது வேறு யாருமல்ல ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா தான். விஜய் 2007ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த போது அவருக்கு பெயர் சொல்லும் படி வேலாயுதம் என்ற ஒரு படத்தை ஜெயம் ராஜா வழங்கினார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜெயம் ராஜா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் இந்த சம்பவம் வெளிவந்திருக்கிறது. நடிகர் விஜய் சந்தித்து ஒரு கதையை நான் கூறினேன். அது டபுள் அக்ட் கதை. விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பது போல் அந்த கதை உருவாக்கப்பட்டது.
திரில்லிங்காக செல்லும் அளவுக்கு கதையை வடிவமைத்தேன். இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டது.இதனை நாங்கள் சூட்டிங் செய்யத்திட்டமிட்டிருந்தோம். அப்போதுதான் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடம் என்ற திரைப்படம் வந்தது.
இந்த திரைப்படமும் எங்களுடைய கதையும் ஒரே மாதிரி இருந்தது. இதற்கு மேல் அந்த படத்தை எடுத்தால் சரி வராது என்று நாங்கள் நிறுத்தி விட்டோம்.இல்லையெனில் அந்தப் படம் ரிலீஸ் ஆகி இருக்கும்.
இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் கதையை நான் மாற்றி விட்டேன். தற்போதும் அது விஜய்க்காக தான் இருக்கிறது. அது தவிர மேலும் இரண்டு கதையை நடிகர் விஜய்க்காக நான் செய்திருக்கிறேன்.
நிச்சயமாக நடிகர் விஜய்யுடன் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை மேற்கொள்ள உள்ளேன் என ஜெயம் ராஜா கூறியிருக்கிறார். ஜெயம் ராஜாவின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.