ஓராண்டுக்கு முன் ஜே.டி – ஜெர்ரி இயக்கத்தில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்த திரைப்படம் ‘ தி லெஜன்ட் ’ ஆகும். விஞ்ஞானி சரவணா சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட அதை எதிரிகள் தடுக்கின்றனர். இந்த தடைகளைத் தாண்டி அவர் ஜெய்க்கிறாரா இல்லையா என்பதே கதை.
முதலில் விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த இவர் சினிமாவுக்குள் அடுத்ததாக அடியெடுத்து வைத்தார். நெட்டிசன்கள் என்னதான் கலாய்த்தாலும் அதை சற்றும் செவியில் வாங்காமல் தன் பாதையில் லெஜன்ட் சரவணா நகர்கிறார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பின் உடனே அடுத்தப் படத்தையும் துவங்கவிருப்பதாய்க் கூறினார்.
ஆனால் ஒரு வருடம் ஆகியும் எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிரடியான லுக்கில் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். இன்று தன் கடையில் குட்டிப் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை சந்தோசமாக கொண்டாடினார்.
இந்தக் கொண்டாட்டத்தில் ஜெயிலர் படத்தில் வரும் ‘ அலப்பற கிளம்புறோம் ’ பாடலுக்கு நடமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வழக்கம் போல வைரல் ஆனது. பல்வேறு புகைப்படங்களும் வெளியாகின. அனைத்திலும் லெஜன்ட் சரவணா கம்பியூட்டர் உருவாக்கிய பொம்மை போல் தெரிந்தார். இது உண்மையில் அவர் தானா அல்ல எடிட்டிங்கா என்ற குழப்பத்தில் பலர் இருந்தனர்.
Legend Saravana celebrating with kids 😍🤘
— Muthuvel Pandian (@decommuter) August 15, 2023
Hukum 🫡pic.twitter.com/sPHfL8e01S
வெளியான வீடியோ காட்சியில் ஒரு குழந்தை, “ உங்கள் லெஜன்ட் படத்தைப் பார்த்தோம். மிகவும் சூப்பராக இருந்தது. அடுத்து எப்போது படம் செய்யப் போகிறீர்கள் ? ” என கேட்க அதற்கு சரவணன், “ இத்தனை நாட்கள் நல்ல கதைக்கு காத்திருந்தேன். தற்போது அது கிடைத்துள்ளது, விரைவில் தொடங்குகிறேன். ” என அறிவித்துள்ளார்.
இன்னும் எந்த இயக்குனர் என கூறவில்லை ஆனால் அடுத்தப் படம் வருவது நிச்சயம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி முடிவில் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி அவர்களுடன் ஆண்ணதமாக கொண்டாடி மகிழ்ந்தார்.