Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜயை விட எனக்கு சம்பளம் அதிகம்.. ரஜினி ரீல் ஹீரோ, இவர் தான் ரியல் ஹீரோ-...

விஜயை விட எனக்கு சம்பளம் அதிகம்.. ரஜினி ரீல் ஹீரோ, இவர் தான் ரியல் ஹீரோ- மன்சூர் அலி கான்

தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து 96 கிட்ஸ்களை பயமுறுத்தியவர் நடிகர் மன்சூர் அலிகான். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த மன்சூர் அலிகான் பிறகு அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடவடிக்கையால் தற்போது மன்சூர் அலிகான் மீண்டும் உச்சத்திற்கு சென்று விட்டார். விக்ரம் திரைப்படத்தில் அவர் நடித்த பாடல் ஒன்று இடம் பெற்ற பிறகு பலரும் மன்சூர் அலிகான் கெத்தை தற்போது உணர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனியார் youtube சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் பேசிய மன்சூர் அலிகான் கைதி படத்தில் ஹீரோவாக நடித்த முதலில் தம்மிடம் தான் லோகேஷ் கனகராஜ் பேசியதாகவும் இது குறித்து தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தம்மிடம் வந்து படத்தின் நடிக்க பேசியதாகவும் கூறினார்.

- Advertisement -

ஆனால் அப்போது வழக்கு ஒன்றில் நான் சிறைச்சாலைக்கு செல்ல நேரந்தது. இதனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு இப்போது விஜயுடன் பெரிய படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தில் பல வில்லன்கள் இருக்கலாம். ஆனால் இது முழுக்க முழுக்க நடிகர் விஜயின் படம் ரசிகர்களுக்கு முழு விருந்து. மேலும் நடிகர் விஜயின் உயர்வு எனக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. வசந்தவாசல் திரைப்படத்தில் நானும் விஜய்யும் இணைந்து நடித்தோம். விஜய் அப்போது சினிமாவுக்கு புதுசு.

நான் மக்களிடம் பெயரை வாங்கி இருந்தேன். எனக்கு 4 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் படத்தின் ஹீரோவான விஜய்க்கு வெறும் இரண்டு லட்சம் தான் சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் விஜய் தற்போது வேற லெவலுக்கு சென்று விட்டார்.

அவருடைய உழைப்பு பாராட்டத்தக்கது தான். என்னை பொருத்தவரை சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் இருந்தாலும் அவர் வயதாகி விட்டது. இனி அடுத்தவருக்கு அந்த இடத்தை கொடுக்க வேண்டும்.தமிழக மக்களுக்கு நிறைய உதவிகளை ரஜினி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் அதை எல்லாம் அவர் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினியை விட எம்ஜிஆர் தான் ரியல் ஹீரோ ரஜினி ரியல் ஹீரோ என்று மன்சூர் அழிக்கான் கூறியுள்ளார் கூறியுள்ளார்.

Most Popular