தமிழ் சினிமாவில் தற்போது அதிக வசூல் செய்த திரைப்படம் என்றால் அது 2.0 தான். உலகம் முழுவதும் அது 650 கோடி ரூபாய்க்கு வசூல் செய்து இருக்கிறது. ஆனால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் எல்லாம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்து விட்டார்கள்.
ஆனால் தமிழில் பொன்னியின் செல்வன் அந்த சாதனையை உடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 500 கோடி என்ற அளவில் தான் சென்றது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் அந்த சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஜெய்லரின் வசூல் ஸ்லோவாகிவிட்டது.
இதன் காரணமாக ஜெய்லர் 500 அல்லது 550 கோடி என்ற அளவில் தான் வசூல் செய்யும் என தெரிகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் மீண்டும் இணைந்து லியோ படத்தில் வசூவை அடித்து நகர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இது பேன் இந்தியா படம் என்று விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது லியோ படத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதுவரை தமிழில் லியோ திரைப்படம் தனியாக தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மற்ற மாநிலங்களில் அதிக வசூல் கிடைத்தால் மட்டுமே ஆயிரம் கோடி என்ற கனவு மெய்ப்படும். தற்போது கர்நாடகாவில் சிவராஜ்குமார் நடிக்கும் கோஸ்ட் என்ற திரைப்படம் தெலுங்கில் ரவி தேஷ் நடிக்கும் டைகர் நாகேஸ்வரராவ் மற்றும் பகவான் கேசரி என்ற பாலையாவின் திரைப்படமும் அதே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.
இதேபோன்று ஹிந்தியில் கண்பத் என்ற திரைப்படம் திரைக்கு வருகிறது. இதில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இதனால் லியோ திரைப்படம் வெளிமாநிலங்களில் போதிய வசூலை எடுக்காது என தெரிகிறது.
இந்த திரைப்படங்களின் மூலம் லியோவின் வசூல் பெருமளவு பாதிக்கப்படும். இதனால் ஆயிரம் கோடி அல்ல 500 கோடியை கூட தொட முடியாத நிலை லியோவுக்கு ஏற்பட்டு இருப்பதாக திரைப்பட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.