அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி காட்டு தீ போல் பரவி வரும் இந்த சமயத்தில் பல பிரபலங்களும் ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை ஏதோ ஒரு விதத்தில் பதிவிட்டு கொண்டு தான் வருகிறார்கள்.
அந்த வகையில் 80களில் கதாநாயகனாக இருந்து பின் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கட்டப்பாவாக இடம் பிடித்த நடிகர் சத்யராஜ் தற்பொழுது என்னுடைய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
புது இயக்குனர் மோகன் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் அங்காரகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.திரைப்படத்தின் உடைய பிரஸ்மீட் தற்பொழுது நடைபெற்றிருக்கிறது. அதில் 15 நிமிடத்திற்கு மேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றியும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றியும் விலகி இருக்கிறார். நடிகர் சத்தியராஜ் பொதுவாக சூப்பர் ஸ்டார் என்பது வசூல் ரீதியாகவும் சம்பள ரீதியாகவும் உயர்வில் யார் இருக்கிறார்களோ அவரை சூப்பர் ஸ்டார் என்போம்.
அந்த வகையில் ஏறத்தாழ ஒரு 40 வருடமாக சூப்பர் ஸ்டார் என்றாலே நாம் ரஜினிகாந்த்தை தான் கூறி வருகிறோம்.சூப்பர் ஸ்டார் என்ற பெயரை கேட்டதுமே அவருடைய முகம் தான் அனைவருக்கும் தோன்றும். அது அவருக்கின்ற உரிய பட்டம் உதாரணமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற பட்டம் அவருக்கு தான் பொருந்தும்.
அடுத்த மக்கள் திலகம் யார் என்று கேள்வி தவறானது. அது பொருத்தம் இல்லாத ஒன்று. சூப்பர் ஸ்டாரை மக்கள் திலகம் ரஜினிகாந்த் என்று கூறினால் அது அவருக்கு பொருந்தாது. சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்.
அதேபோல் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகையர் திலகம் சிவாஜி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய் ,தல அஜித் இதுவெல்லாம் தான் சரி இதில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் அடுத்த உலக நாயகன் யார் அடுத்த தளபதி என்பதெல்லாம் பொருத்தம் இல்லாத ஒன்று என்பதை குறிப்பிட்டு இருந்தால் நடிகர் சத்யராஜ்
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்தான் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல் உலகநாயகன் கமலஹாசன் எவ்வளவு தத்ரூபமாக நடித்தாலும் அவரை உலகநாயகன் என்று சொல்வதுதான் சரி.
அது போல் அவரை போல் நடிகையர் திலகம் கமலஹாசன் என்று கூறினால் அது சரி ஆகாது என்ற விளக்கத்தை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு கொடுத்திருக்கிறார். நடிகர் சத்யராஜ் இதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் என்பது பதவி என்ன இவருக்கு பின் இவர் என்பதற்கு அது ஒரு பட்டம் அவருக்கு மட்டுமே உரியது என்று ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.