துணிவு திரைப்படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருந்த அஜித் ஸ்கிரிப்ட்டில் திருப்தி அடையாததால் படத்தைக் கைவிட்டார். அதே லைகா நிறுவனத்துடன் இன்னொரு இயக்குனரின் தேடலில் மகிழ் திருமேனி கிடைத்தார்.
இவர் ஒப்பந்தம் ஆகி 3 மாதங்கள் கழித்து தான் அதிகாரபூர்வ அறிவிப்பே வெளியானது. மே மாதம் அஜித்தின் 62வது படத்தின் தலைப்பு ‘ விடாமுயற்சி ’ எனவும் அதற்கு இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் என்ற செய்தியை ரசிகர்களுக்கு அளித்தது.
அஜித் – லைகா கூட்டணி சேர்ந்து கிடைத்த முதல் மற்றும் கடைசி அதிகாரபூர்வமான அப்டேட் இது மட்டுமே. மே மாத இறுதியில் படத்தின் ஷூட்டிங்கை படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்தன. அதில் அடுத்தடுத்து ஜூன் முதல் வாரம், ஜூலை இறுதி, ஆகஸ்ட் 18 என தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
அஜித்தின் விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அவரின் எந்த பிராஜெக்ட்டின் அறிவிப்புகளும் சரியாக கிடைக்கவில்லை. ஏனோ தானோ என திடீரென்று வரும் முன்னறிவிப்பு இருக்காது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அறிவிப்பை விட மிகக் கூடிய செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களை உலுக்கி வருகிறது.
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஏற்கனவே கைவிடப்பட்டுவிட்டதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நியூஸ் 18 டிவிட்டர் பதிவிடபட்ட இந்தத் செய்தி மிகவும் வைரல் ஆனது. ஏற்கனவே ஜூன் மாதம் இது போன்ற செய்தி பரவியது ஆனால் அதனை வதந்தியாகவே அன்று பார்த்தனர்.
இன்று மிகவும் பரபரப்பாக பேசப்படும் இச்செய்தி குறித்து இன்னும் படக்குழுவும் எதுவும் கூறவில்லை. ஆனால் இச்செய்தி பொய் என சினிமா நிருபர்கள் மற்றும் டிராக்கர்கள் தெரிவிக்கிறார்கள். அதனால் அஜித் ரசிகர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இதன் நற்செய்தி.
இதனை வதந்தி என கூறும் சினிமா டிராக்கர்கள் வருத்தமான செய்தியையும் கூறியிருக்கிறார்கள். அதாவது இன்னும் அஜித்தின் விடாமுயற்சிவிடாமுயற்சி படம் எப்போது ஆரம்பிக்கும் என்பதை முடிவு கூட செய்யவில்லையாம். ஒரு வேளை லைகா இப்படத்தில் இருந்து விலகினால் கூட வேறு தயாரிப்பு நிறுவனத்துடன் அஜித் இணைவார் எனத் தெரிகிறது.