நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறை கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. மிக பிரம்மாண்டமான படையுடன் தயாராகும் இப்படத்தின் ஷூட்டிங்கை லோகேஷ் & கோ ஒரு மாதத்திற்கு முன்பே நிறைவு செய்துவிட்டது. சிறிய பேட்ச் வொர்க பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
விஜய் படம் என்றாலே திருவிழா தான். படத்தின் ரிலீசுக்கு முன்பு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியே கோலாகலமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தளபதி விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும். ஆனால் இந்த முறை மிகப் பெரிய பேன் இந்தியா படங்கள் போல செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.
இந்தத் திட்டத்தில் சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. எப்போதும் இல்லாமல் இந்த முறை விஜய்யின் படத்துக்கு 2 பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் செய்யவிருந்தனர். ஒன்று மதுரை அல்லது கோயம்புத்தூரில். இதற்கு காரணம் விஜய்யின் அரசியல் துவக்கத்தின் முதல் அடி என்ற பேச்சுகளும் உண்டு. மற்றொரு நிகழ்ச்சி வெளிநாடு துபாயில்.
வெளிநாட்டு நிகழ்ச்சி நடந்தால் படத்திற்கு மிகப் பெரிய புரொமோஷனாக அமையும். ஆனால் லியோ படக்குழுவினர் நேரம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. படக்குழு கேட்கும் தேதிகளில் அரங்குகள் கிடைக்காததால் துபாய் நிகழ்ச்சி ரத்தாகிறது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்துக்குள் மதுரை அல்லது கோயம்பத்தூர் நகரங்களில் என கூறப்படும் செய்தி கூட இன்னும் உறுதியாகவில்லை. பெரும்பாலான சினிமா டிராக்கர்கள் அக்டோபர் 5ஆம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்கின்றனர். துபாய் பிளான் ரத்தானதால் சென்னையில் ஒன்று மதுரை/கோயம்பத்தூரில் ஒன்று என இரண்டு நிகழ்ச்சிகள் நடக்கவும் வாய்ப்புள்ளது.
இது தவிர வட இந்தியாவில் புரமோஷனுக்காக மட்டுமே 10 கோடி பட்ஜெட்டில் ஒதுகியுள்ளார்கள். ஹிந்தி ஆடியன்ஸை கையில் வைத்திருந்தால் மட்டுமே கே.ஜி.எப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களைப் போல மிகப் பெரிய லாபத்தை சம்பாதிக்க இயலும். இந்த மாத இறுதியில் 2வது பாடலுடன் விளம்பரத்தை துவங்கவிருக்கிறது லியோ.