வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நடிகர் ஷாருக்கான், நயன்தாரா நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த திரைப்படத்தை தமிழக இயக்குனர் அட்லி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கான முன் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடப்பாண்டில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த பதான் திரைப்படம் முன்பதிவில் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்று இருந்த நிலையில் தற்போது ஜவான் திரைப்படம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவில் விற்று இருக்கிறது.
இதன் மூலம் பதானைவிட ஜவான் திரைப்படம் அதிக வசூலை பெறும் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள். மேலும் அட்லி திரைப்படம் என்பதால் தமிழக, கேரளா ரசிகர்கள் அதிக அளவில் இந்த படத்தை பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் அட்லி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தான் இந்த படத்தை இயக்க காரணம் என்று கூறியிருந்தார். மேலும் இந்த விழாவில் பங்கேற்ற பல நட்சத்திரங்களும் நடிகர் விஜய் பாராட்டி பேசி இருந்தார்கள்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட என்னால் விஜய் போல் நடனம் ஆட முடியாது என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிரியாமணி அனிருத்துக்கு லியோ போல் ஜவானும் நல்ல பெயரை வாங்கி தரும் எனக் கூறியிருந்தார். இப்படி விஜய் மற்றும் லியோ குறித்து பேசிய அனைத்து காட்சிகளும் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான ஜவான் இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியில் அதிரடியாக நீக்கப்பட்டது.
இது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதால் சன் டிவி வேண்டும் என்றே இப்படி ஒரு செயலை செய்து இருக்கிறதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பலரும் சன் டிவியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சன் டிவி நேற்று ஒரு விளக்கமளித்திருந்தது. இந்த நிகழ்ச்சியை தயாரித்ததும் எடிட் செய்ததும் கோகுலம் நிறுவனம்தான் என்று கூறியிருந்தது.இது மேலும் ரசிகர்களை அதிர்ச்சடை செய்திருக்கிறது.
ஏனென்றால் லியோ திரைப்படத்தை கேரளாவில் கோகுலம் நிறுவனம்தான் விநியோகம் உரிமையை வாங்கி இருக்கிறது.
இதனால் விஜய் குறித்து பேசி அனைத்து காட்சிகளையும் அவர்கள் நீக்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.