Saturday, November 23, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி மீது கடும் கோபத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்? கைவிடப்படும் தலைவர் 171?

ரஜினி மீது கடும் கோபத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்? கைவிடப்படும் தலைவர் 171?

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தன்னுடைய அடுத்த திரைப்படமான தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் என்ன என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுவது அதிர்ச்சியை கிளப்பும் வகையில் இருக்கிறது.தலைவர் 171 படத்திற்கான கதையை லோகேஷ் கனகராஜ் கூறுவதற்காக ரஜினியை சந்தித்து பேசி இருந்திருக்கிறார்.

அப்போது நீங்கள் அடுத்து எடுத்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் ஏதேனும் சிறந்த காட்சி ஒன்று இருக்கிறதா அதனை கூறுங்கள் என ரஜினி கேட்டதாகவும் அதற்கு இடைவெளியில் எதிரிகளை ஸ்னைப்பர் வைத்து ஹீரோ கொள்வது போல் காட்சிகள் வைத்திருக்கிறேன் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதனைக் கேட்ட ரஜினி அதனை அப்படியே நெல்சன் இடம் கூறி இன்டர்வல் காட்சியை எடுக்க கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி ஆன லோகேஷ் கனகராஜ், ரஜினி சார் இப்படி செய்வார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை என்று புலம்பி வருகிறாராம்.

- Advertisement -

நம்பிக்கையின் பெயரில் சொன்ன காட்சியை இப்படி பட்டவர்த்தனமாக ஜெய்லர் படத்தில் வைத்திருப்பதால் இனி அந்தக் காட்சியை பயன்படுத்தினால் அது நன்றாக இருக்காது என்று லோகேஷ் கனகராஜ் புலம்பி வருகிறார்.

எப்போதுமே ஒரு படத்திற்கு இடைவெளிக் காட்சி என்பது மிகவும் முக்கியம் என்றும் அதனை தான் சிறப்பாக செய்ததாகவும் தற்போது டிரைலரின் இந்த காட்சி வந்து இருப்பதால் லியோ வின் ஒட்டுமொத்த இன்டர்வல் காட்சியை மாற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் படத்தை திட்டமிட்டபடி அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு வதந்தி கோலிவுட்டில் பரப்பப்பட்டு வருகிறது. ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி ஹிட்டான உடன் நடிகர் விஜயின் லோகேஷ் கனகராஜ் நெல்சனை வாழ்த்தி ட்விட் போட்டிருந்தார்கள். இதனால் இது வதந்தியாகவே இருக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். சூப்பர் ஸ்டார் அப்படிப்பட்ட ஆளே கிடையாது என்றும் ரஜினி ரசிகர்கள் ஆணித்தனமாக கூறி வருகின்றனர்

Most Popular