தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் திரைப்படம் எப்போதெல்லாம் ரிலீஸ் ஆகிறதோ அப்போதெல்லாம் பிரச்சனை வருவது என்பது இயல்பு. துப்பாக்கி படத்தில் சிகரெட் குடிப்பது போல் போஸ்டர் வைத்ததற்காகவும்,கத்தி படத்தில் தயாரிப்பாளர் இலங்கையை சேர்ந்தவர் என்பதற்காகவும் பல பிரச்சினைகள் உருவாகின.
இந்த நிலையில் லியோ படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் அதற்கு டிசைன் டிசைனாக புதுசாக பிரச்சனை வருகிறது.லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி அண்மையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆனது.
இந்த பாடல் youtube-ல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் பாடல் மது சிகரட்டை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக பல குற்றச்சாட்டுகள் வந்தது. இந்தப் பாடல் வரிகளை மாற்ற வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கினார்கள்.
இதற்கு பதிலடி தந்த விஜய் ரசிகர்கள் கதைக்களம் அப்படி இருக்கும்போது சிகரெட் மதுவை தான் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து தற்போது சென்சார் போர்ட் இந்த பாடலில் சில வரிகளை மாற்றும்படி உத்தரவிட்டுள்ளது.அதன்படி அண்டாவை கொண்டு வா சியர்ஸ் அடிக்க, மில்லி உள்ளே போனா கில்லி வெளியே வருவாண்டா என்ற பாடல் வரிகள் எங்கெங்கெல்லாம் வருகிறதோ அதை எல்லாம் மாற்றும்படி சென்சார் போர்ட் தற்போது அறிவித்திருக்கிறது.
இது விஜய் ரசிகர்களை கடுப்படைய செய்து இருக்கிறது. இப்படி பாடல் வரிகளை எல்லாம் மாற்ற சொன்னது சரிதானா பெரும்பாலான நடிகர்கள் சிகரெட் மது ஆகியவற்றை பயன்படுத்தி நடிக்கும் போது விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நடவடிக்கை என்று பலரும் கேள்விகளுக்கு வருகிறார்கள்.