ஜெய்லர் திரைப்படத்திற்கு பிறகு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய தமிழ் திரைப்படம் என்றால் அது லியோ தான். ஜெயிலர் நிகழ்த்திய வசூல் சாதனையை லியோ முறியடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் விஜய் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக பலரும் கூறி வருவது ரஜினி ரசிகர்களை கடுப்பாக செய்திருக்கிறது. விஜய்க்கு எதிராக தற்போது ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனங்களை பரப்பி வருகிறார்கள்.
மேலும் முழு திரைப்படத்தை ஓட விடமாட்டோம் என்றும் லியோவுக்கு எதிர்மறையான விமர்சனங்களை தான் ஆரம்பத்தில் இருந்து கொடுப்போம் என்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் லியோவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருந்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை ரஜினியுடன் சேர்ந்து எடுக்க உள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் பெரிய ஷாக் ஒன்றை கொடுத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி சேர்ந்திருப்பது அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த விஷயமாகும்.
இதனால் லியோ திரைப்படத்தை ரஜினி ரசிகர்கள் விமர்சிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் லியோ திரைப்படம் சரியில்லை என்று விமர்சனத்தை கூறினால் அது தலைவர் 171 படத்தை பாதிக்கும் என்பதால் தற்போது ரஜினி ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
மேலும் லியோ படத்தை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்திய ரஜினி ரசிகர்கள் எல்லாம் தற்போது அந்த படத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது லோகேஷ் கனகராஜ் வைத்த மிகப்பெரிய செக்காக பார்க்கப்படுகிறது.
லியோ திரைப்படம் வெளியான பிறகு தலைவர் 171 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது லியோ ரிலீஸுக்கு முன்பே அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகி இருப்பது ரஜினி ரசிகர்களை விஜய்க்கு எதிராக திருப்பாமல் இருக்கத்தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.