2018ஆம் ஆண்டு வந்த விஸ்வரூபம் படத்திற்குப் பின் கமல்ஹாசன் 4 ஆண்டுகள் படங்கள் செய்யவில்லை. விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தினார். கடந்த ஆண்டு தன் ஃபேன் பாய் இயக்கத்தில் ‘ விக்ரம் ’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் உலகநாயகன் சினிமாவுக்குள் நுழைந்தார்.
இந்தத் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க மற்றும் தயாரிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கமல்ஹாசன் கையில் வினோத் இயக்கத்தில் ஓர் படம், இந்தியன் 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ஓர் படம் மூன்று பெரிய படங்கள் உள்ளன.
அடுத்த ஆண்டு இந்தியன் 2 திரையரங்கில் வெளியாகிறது. வினோத்துடன் செய்யும் படம் கமல்ஹாசன் 233. இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் 36 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள திரைப்படம் கமலின் கேரியரில் 234வதாக உள்ளது. மணிரத்னம் உடனான திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகம்.
ரெட் ஜெயண்ட்ஸ் & ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு வந்த 9 மாதங்கள் ஆகியும் வேறு எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை. ஸ்கிரிப்ட் பணிகளில் இயக்குனர் மணிரத்னம் தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு எதிர்பார்த்தது போல ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
கமல்ஹாசன் – மணிரத்னம் படத்தில் கமலைத் தவிர 2 முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பெரிய நடிகர்களுக்கான தேர்வுப் பணியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். முதலில் சிம்பு நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவின ஆனால் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. தற்போது அந்த 2 முக்கிய வேடங்களுக்கு ஒரு தமிழ் நடிகரும் ஓர் மலையாள நடிகர்களிடம் அனுகியிருப்பாதாக தககவ்கள் கிடைத்துள்ளன.
அவர்கள் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆவர். இருவரும் நடிப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. பெரிய நடிகர்கள் வைத்து பிரம்மாண்டமாக படம் செய்து 500 – 1000 கோடிக்கு மேல் வசூல் செய்யும் திட்டம் தற்போது இந்திய சினிமாவில் ட்ரெண்டாக உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே மணிரத்னத்தின் கீழ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.