தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய திரைப்படமாக பார்க்கப்படுவது லியோ தான். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு அடுத்த வாரத்தில் இருந்து இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லியோ திரைப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே பட்டித் தொட்டி இருந்தும் ஹிட்டான நிலையில் தற்போது இரண்டாவது பாடலுக்கான பணிகளை இசையமைப்பாளர் அணியும் தீவிரமாக இறங்கி வருகிறார். ஜவான் வெற்றிக்கு பிறகு குஷியில் இருக்கும் அனிருத் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கி விட்டாராம். லியோ படத்தின் இரண்டாவது பாடல் தற்போது மெருகேற்றும் பணியில் அனிருத் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பாடல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ஆம் அல்லது 17-ஆம் தேதி பாடல் ரிலீஸ் செய்யப்படலாம். இந்தப் பாடல் ரிலீஸ் ஆகி சில நாட்களிலே படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்க தயாரிப்பாளர் லலித் குமார் முடிவெடுத்து இருக்கிறார்.
செப்டம்பர் 30 அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தான் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தெரிகிறது. இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பு படத்தின் டீசரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
எனினும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த பிறகு படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதமாக இந்த படம் எல் சி யு வில் வருமா வராதா என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக அறிவிப்பாளர் தெரிகிறது. லியோ ப்ரமோஷன் பணிக்கனுக்காகத்தான் நடிகர் விஜய் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.