Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாசிம்பு,தனுஷ், விசாலுக்கு ரெட் கார்ட்.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி.. காரணம் என்ன?

சிம்பு,தனுஷ், விசாலுக்கு ரெட் கார்ட்.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதிரடி.. காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் நான்கு பேருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்படி விளையாட்டு உலகில் ரெட் கார்டு வழங்கப்பட்டால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்களோ

- Advertisement -

அதை போல் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் ரெட் கார்டு வழங்கப்படும் போது அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப்பெறாது. மேலும் அவர்களுடைய திரைப்படங்களை யாரும் வாங்கவும் மாட்டார்கள் விற்கவும் மாட்டார்கள்.

மேலும் அந்த நடிகர்களை எந்த திரைப்படத்திலும் பயன்படுத்தக்கூடாது போன்ற உத்தரவுகள் தான் மூலம் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருக்கும் நடிகர் தனுஷ், சிம்பு, விஷால்,அதர்வா ஆகியோர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் ரெட் கார்டு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

நடிகர் சிம்புவுக்கு இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக ரெட் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஐசரி கணேசன் படத்தில் நடிப்பதாக இருந்து வேறு படத்திற்கு சென்றதால் பிரச்சனை கிளம்பியது. இதனை அடுத்து இருவரும் சமாதானமாக போனதால் தற்போது அந்த பிரச்சனை தீர்ந்த நிலையில் ட்ரிபிள் எ திரைப்படத்திற்காக மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரில் தற்போது சிம்புவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று நடிகர் தனுஷ்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் தேன் ஆண்டாள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டு அந்த படத்தை முடித்துக் கொடுக்காமல் போனதால் அந்த தயாரிப்பாளர் பல லட்சம் நஷ்டத்தை சந்தித்தார் என்று புகார் எழுந்துள்ளது.

இதற்காக அவருக்கு சிவப்பு கார்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று நடிகர் விஷால் நாளை மார்க் ஆண்டனி திரைப்படம் ரிலீஸ் ஆகும் உள்ள நிலையில் அவருக்கும் சிவப்பு அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இதில் தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பணத்தை நடிகர் விஷால் கையாடல் செய்து விட்டதாகவும் லைக்கா உடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் அவருக்கு ரெட் கால் வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று நடிகர் அதர்வா மதியழகன் என்ற தயாரிப்பாளர் படத்தை முடித்துக் கொடுக்காமல் சென்றதால் அவருக்கும் சிவப்பு காடு வழங்கப்பட்டிருக்கிறது.

Most Popular