Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாவிஷால், எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆன்டணி திரைப்படத்தின் விமர்சனம்.. !

விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் மார்க் ஆன்டணி திரைப்படத்தின் விமர்சனம்.. !

புரட்சித் தளபதி விஷால், நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா, சுனில் மூவரைச் சுற்றி நடக்கும் காமெடி கலந்த கேங்ஸ்டர் கதை தான் மார்க் ஆன்டனி. படம் முழுக்க காமெடி தான், குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் உடல் பாவனை. தியேட்டரில் நன்றாக சிரித்து மகிழ்ந்து பார்க்கலாம்.

- Advertisement -

1975ஆம் ஆண்டு செல்வராகவன், தொலைபேசி மூலம் காலம் பின்னோக்கி சென்று பேசக் கூடிய கருவியைக் கண்டுபிடிக்கிறார். பின்னர் கிளப்புக்கு சென்று அங்கு நடக்கும் சண்டையில் இவரும் ஆண்டியுமான விஷாலும் இறந்துவிடுகின்றனர். இறந்த அப்பாவை மீண்டும் மகன் விஷால் இக்கருவியை வைத்து உயிர் தப்பிகச் செய்கிறார்.

இதனால் எஸ்.ஜே.சூர்யாவின் வாழ்கை மாறுகிறது. பின்னர் இதனை வைத்து எஸ்.ஜே.சூர்யா வாழ்கையை மாற்ற முயற்சிக்கிறார். இதற்கிடையே நடக்கும் காமெடி காட்சிகள் தான் மிகவும் ரசிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆண்டணியாக வரும் விஷால் பட்டையைக் கிளப்புகிறார். இது விஷாலுக்கு நிச்சயம் ஓர் கம்பேக் எனவே கூறலாம்.

- Advertisement -

மறுபக்கம் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா காமெடியில் உடல் தோரணையில் கலக்கியுள்ளார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் தரம். நடிகர் சுனில் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்துள்ளார். நாயகியாக வரும் ரித்து வர்மா மிகவும் குறைவான காட்சிகளிலேயே வருகிறார்.

- Advertisement -

படம் துவக்கத்தில் மிகவும் பொறுமையாக போவது போல் இருக்கும். ஒரு அரை மணி நேரம் கழித்து கதையில் சூடு பிடிக்கத் துவங்கிவிடும். அதன் பின்னர் சண்டைக் காட்சிகள், காமெடி என கலக்கல் தான். படத்தின் இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை சிறப்பாக எழுதியுள்ளார். முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் சூப்பராக உள்ளது.

இசையில் ஜி.வி.பிரகாஷ் தரமான செய்கை. ஆக்சன் காட்சிகள் அனைத்தும் சூப்பராக இருந்தது. அதிலும் ‘ வருது வருது ’ மற்றும் ‘ பஞ்சு மிட்டாய் ’ பாடல்கள் கொண்ட சண்டைக் காட்சிகள் ரசிகர்களின் கைதட்டல்களை சம்பாதித்தது. இதுவரை எந்த படமும் தேறாமல் இறந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பட்டியலில் முதல் சிறப்புத் திரைப்படமாக மார்க் ஆண்டனி இடம்பெற்றுள்ளது. குடும்பத்துடன் சென்று சிரித்து மகிழலாம்.

Most Popular