Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ 1000 கோடி வசூலுக்கு நாமம் தான்.. போட்டிக்கு 4 படங்கள்.. ஜெயிப்பாரா விஜய்.. !

லியோ 1000 கோடி வசூலுக்கு நாமம் தான்.. போட்டிக்கு 4 படங்கள்.. ஜெயிப்பாரா விஜய்.. !

இன்னும் ரீலீசுக்கு 20 நாட்களே இருக்கும் லியோ படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வந்துக் கொண்டே இருக்கின்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நிகழ்ச்சி முதலில் ரத்தானது. பின்னர் சென்னை இசை வெளியீட்டு விழாவும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது.

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – இளைய தளபதி விஜய் இரண்டாவது முறையாக கைக்கோர்துள்ள படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட ஓர் பெரிய படையே நடித்துள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்புக்கு முன்பே இதன் எதிர்பார்ப்புகள் உச்சத்தைத் தொட்டன.

படக்குழும் 1000 கோடியை அடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தது. அதற்காக பல்வேறு புரொமோஷன்களை திட்டத்தில் வைத்திருந்தது. இசை வெளியீட்டு விழா தவிர வட இந்தியாவில் பிரம்மாண்ட புரொமோஷனுக்காக தனி பட்ஜெட் கூட ஒதுக்கி இருந்தனர். ஆனால் எதுவுமே அவர்கள் நினைத்தது போல அமையவில்லை.

- Advertisement -

லியோ படம் வருகின்றனர் ஆயுத பூஜைக்கு முன்னர் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. தொடர் விடுமுறைகள் பயன்படுத்தி நல்ல லாபத்தை பார்க்க படக்குழு அறிவிப்பின் போதே ரீலீஸ் தேதியையும் லாக் செய்துவிட்டனர். தமிழில் எப்படியும் லியோ தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் பெரிய லாபத்தை பார்க்க மற்ற மொழிகளிலும் தாக்குப் பிடிப்பது அவசியம்.

- Advertisement -

லியோ படத்துடன் 4 பெரிய படங்கள் ரீலீஸ் ஆகிறது. தெலுங்கில் பாலா கிருஷ்ணாவின் பகவதி கேசரி படமும் ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் படமும் உடன் வெளியாகிறது. இரண்டுமே தெலுங்கு துறையில் பெரிய படங்கள். கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமாரும் இந்தப் பட்டியலில் அடுத்து இணைகிறார்.

அண்மையில் ஜெயிலர் படத்தின் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்ற சிவராஜ் குமாரின் ‘ கோஸ்ட் ’ திரைப்படம் ஆயுத பூஜைக்கு வெளியாகிறது. கன்னட சூப்பர்ஸ்டார் என்பதால் அவரைத் தாண்டி லியோ சாதிப்பது சவாலான விஷயம். இந்த மூன்று படங்களை விட மிக கடினமாக போட்டியாளர் டைகர் ஷெராப் & கோ தான்.

டைகர் ஷெராப், கிரித்தி சனோன், அமிதாப் பச்சன் நடிக்கும் ‘ கணபதி முதல் பாகம் ’ திரைப்படம் அடுத்து ஹிந்தியில் வரும் பெரிய படம். இந்தப் படம் ஹிந்தியில் குறைந்தது 10 நாட்கள் ஆதிக்கம் செலுத்தும். இன்று வெளியான டிரெய்லரும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. லியோ படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றாலும் இப்படத்தை தாண்டி வெல்வது மிகவும் கடினம் என்றே கூறலாம். 1000 கோடி என்பது நிச்சயம் சாத்தியம் இல்லை. 600 கோடி வரை எதிர்பார்க்கலாம் அவ்வளவு தான். இது வெறும் கணிப்பே.

Most Popular