Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாதலைவர் 170 கதை குறித்து ரஜினிகாந்த் பேச்சு.. அமிதாப் பச்சன், பகத் பாசில் என பெரிய...

தலைவர் 170 கதை குறித்து ரஜினிகாந்த் பேச்சு.. அமிதாப் பச்சன், பகத் பாசில் என பெரிய குழு.. !

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு லைகா தயாரிப்பில் அடுத்தடுத்து இரு பெரிய பெரிய படங்களின் அப்டேட்டகள் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் படத்தில் ரஜினிகாந்த் வெறும் கவுரவ தோற்றம் மட்டுமே செய்கிறார். லால் சலாம் எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் அப்படத்தினை அவரது மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

- Advertisement -

ரஜினி ஹீரோவாக நடிக்கும் அடுத்தப் படமும் லைகா தயாரிப்பில் தான். சுபாஸ்கரன் தயாரிக்கும் படத்தினை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். இந்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. நேற்று இன்றும் படத்தில் நடிக்கவுள்ள மற்ற கலைஞர்கள் பட்டியல் ஒவ்வொன்றாக வெளியிட்டனர்.

முதலில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் எனும் போஸ்டர் வெளியாகியது. தலைவருக்கு அனிருத் இசை தான் எப்போதும் எனும் நிலை வந்துவிட்டது. இதர நடிகர்கள் வரிசையில் இரு நாயகிகள் மஞ்சு வாரியர், ரித்திக்கா சிங் மற்றும் துஷாரா இடம்பெற்றுள்ளனர். இந்த கேஸ்டிங் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

எல்லா நடிகர்களின் அறிவிப்பும் போஸ்டர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. அனைத்தையும் விட இன்று வெளியான இரு நடிகர்களின் பெயர் தான் மிகப் பெரிய கவனத்தையும் எதிர்பார்ப்பையும் கூடியுள்ளது. பல்திறன் நடிகர் பகத் பாசில், ராணா மற்றும் பாலிவுட் சிம்மாசனத்தில் என்றும் இருக்கும் அமிதாப் பச்சன் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளனர்.

- Advertisement -

பகத் பாசில் ஏற்கனவே தமிழில் பல சிறந்த படங்கள் நடித்து தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். மறுபக்கம் 32 ஆண்டுகள் கழித்து ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்துள்ளனர். ஜெய் பீம் இயக்குனர் என்பதால் திரைப்படத்தின் மேல் பெரிய கான் உள்ளது.

நாளை திருவனந்தபுரத்தில் படத்தின் ஷூட்டிங் துவங்குகிறது. இதற்காக கிளம்பிய ரஜினிகாந்த்திடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு சூப்பர்ஸ்டார், “ ஜெயிலர் பத்ம நான் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. நல்ல கருத்துள்ள ஓர் பொழுது போக்கு படமாக அது இருக்கும் ” எனக் கூறினார்.

இத்திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்துள்ளன. மேலும் அவர் முஸ்லிமாக நடிக்கவுள்ளார் எனவும் கூறுகின்றனர். எதுவுமே இன்னும் அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை, ஆனால் தகுந்த வட்டாரங்களில் நம்பிக்கையாக கூறுகின்றனர். உண்மையாக பல வாய்ப்புகள் உள்ளன.

Most Popular