லியோ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நாளை முதல் தொடங்க இருக்கிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்கும் அதே வேளையில் மாலை நேரத்தில் லியோ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் இசை கோர்ப்பு பணிகள் தற்போது முடிவடைந்து படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது. தற்போது படத்திற்கு சென்சார் செய்யும் பணி நாளை அல்லது நாளை மறுநாள் நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் லியோ திரைப்படம் எவ்வளவு மணி நேரம் ஓடும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் 2 மணி நேரம் 59 நிமிடம் ஓடியது. இதில் படத்தில் சில தேவையில்லாத காட்சிகள் படத்தை தொய்வு அடையச் செய்ததாக விமர்சனம் இருந்தது .
அதனை மனதில் வைத்துக் கொண்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் இரண்டு மணி நேரம் 54 நிமிடம் வரை ஓடியது. இதில் லோகேஷ் கனகராஜ் ஓரளவுக்கு நேர்த்தியான படத்தையே கொடுத்திருந்தார்.
தற்போது லியோ திரைப்படத்தை இன்னும் நேர்த்தியாக கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மணி நேரம் 43 நிமிடம் ஓடும் அளவுக்கு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். விக்ரமைப் போலவே லியோ படத்தில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
இதனால் அனைத்து கதாபாத்திரத்தையும் உள்ளே கொண்டு வந்து காட்சிகளை அமைத்து படத்தில் கதையை கொண்டு செல்ல எப்படியும் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் லோகேஸ் கனகராஜ் இரண்டு மணி நேரம் 43 நிமிடத்திலேயே படத்தை முடித்து விட்டதாக தெரிகிறது.
எனினும் சென்சாருக்கு பிறகு இது மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனிடையே லியோ திரைப்படத்தின் டிரைவரை ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.