நடிகர் அஜித்குமாரின் அடுத்தப் படம் விடாமுயற்சி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தத் படத்தின் ஷூட்டிங் மே மாதம் துவங்கும் ஜூலை துவங்கும் இப்போது துவங்கும் என அடுத்தடுத்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இது அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
தற்போது அவர்களுக்கு சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிச்சயம் இன்று துவங்கியுள்ளது. அதற்காக அஜித்குமார், திரிஷா மற்றும் மகிழ் திருமேனி & கோ அஜர்பைஜானுக்கு விரைந்துள்ளது. லைகா தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.
அஜித்தின் இந்தப் படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அஜித் – திரிஷா காம்போவிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மற்ற நடிகர்களின் பட்டியல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் தகுந்த வட்டாரங்களில் சில செய்திகள் வந்துள்ளன.
விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக சில மாதங்கள் முன்பு பேசிக் கொண்டனர். இந்த இருவரில் அர்ஜுன் தாஸ் நடிப்பது ஓரளவு உறுதியாகியுள்ளது. வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய நடிகர் வேண்டுமென்பதற்காக படக்குழு மற்ற மொழி நடிகர்களை அணுகியது.
தற்போது லியோ படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் அஜித்தின் விடாமுயற்சியிலும் வில்லனாக நடிப்பார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இவர் இல்லையென்றால் கன்னட சூப்பர்ஸ்டார் மற்றும் ஜெயிலர் படத்தின் கிளைமாக்ஸில் கலக்கிய சிவராஜ் குமார் நடிப்பார் எனக் கூறினார். சில தினங்களுக்கு முன் டிவிட்டரில் அஜித்துடன் இந்த வருடமே நடிக்கவுள்ளதாக ஷிவன்னா பதிவிட்டதன் மூலம் இவர் தான் என அஜித் ரசிகர்கள் கன்பார்ம் செய்துள்ளனர்.
படத்தில் மற்றொரு கதாநாயகி இருப்பார் என மறைமுக செய்திகள் கிடைத்துள்ளது. நடிகை பிரியா பவானி ஷங்கர் இரு தினங்களுக்கு முன்பே அஜர்பைஜானுக்கு சென்றுள்ளார் என்பதை அவரது பதிவுகளில் நாம் காணலாம். அவர் அங்கு விடுமுறைக்கு சென்றாரா அல்ல விடாமுயற்சி படத்துக்காக சென்றாரா என்பது குழப்பமாக உள்ளது. விரைவில் அனைத்து சந்தேகங்களும் தீர்ந்துவிடும். விடாமுயற்சி படத்திற்கு அஜித் 110 நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளார். துபாய்யைச் சுற்றி படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னையில் மீதி படம் ஷூட் செய்யப்படும்.