மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்களில் ரீலீஸ் ஆகவிருக்கிறது. படத்தின் டிரெய்லர் இன்று (அக்டோபர் 5ஆம்) தேதி வருகிறது. அடுத்த 14 நாட்களுக்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யவுள்ளனர்.
இந்தியாவில் படத்தின் வெளியீட்டுக்கு 4 நாட்கள் முன்பு டிக்கெட் விற்பணைகள் துவங்கும். வெளிநாட்டில் போன மாதமே துவங்கி அனைத்து டிக்கட்டுகளும் விற்பனை முடிந்துவிட்டது. ரீலீஸ் தேதி நெருங்க நெருங்க இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாவதால் கூடுதல் காட்சிகளை சேர்த்துக் கொண்டுள்ளனர்.
லியோ படத்தின் வெளிநாட்டு நிகழ்ச்சி ரத்தானதை அடுத்து ஆடியோ லாஞ்ச்சும் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இது விஜய் ரசிகர்களை பெரிதும் வருத்தத்திற்கு தள்ளியது. ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சியில் விஜய்யின் வார்த்தைகளை கேட்க பல இடங்களில் இருந்து வருவர். மேலும் படத்தின் விளம்பரத்துக்கு முதுகெலும்பாக விளங்கும். அது இல்லாதது சற்று பின்னடைவு தான்.
இந்த சோகங்களை அடுத்து மற்றொரு பெரிய சோகச் செய்து விஜய் ரசிகர்களுக்கு கிடைத்தது. அதாவது எப்போதும் போல அதிகாலை காட்சிகள் இம்முறை கிடைக்காது. இதற்கு காரணம் துணிவு – வாரிசு மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு தான். அந்தத் துயரத்திற்கு பிறகு எந்த படமுமே தமிழகத்தில் அதிகாலையில் வெளியாகவில்லை.
ஆனால் லியோ பெரிய படம் என்பதால் தியேட்டர் நிர்வாகிகள் காலை 6 மணி காட்சியாவது திரையிட அனுமதி கேட்கவுள்ளனர். அவர்களுக்கு முன்பு லியோ படக்குழு வேறொரு சிறந்த திட்டத்துடன் வந்துள்ளது. அதாவது லியோ படத்திற்கு 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு என இரண்டு பிரீமியர் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
வழக்கமாக நடக்கும் பிரீமியர் காட்சிகள் அனைத்திலும் சினிமா விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். ஆனால் லியோவுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்து இரண்டு சிறப்புக் காட்சிகள் நடத்தவுள்ளனர். அப்படியென்றால் உலகிலேயே முதல் லியோ காட்சியைப் பார்பத்து தமிழகமாகத் தான் இருக்கும். இது விஜய் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.