Wednesday, October 16, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ படத்திற்கு குறிப்பிட்ட அதிகாலை காட்சிகள் அனுமதி.. ஆனால் ஒரு சிக்கல்.. !

லியோ படத்திற்கு குறிப்பிட்ட அதிகாலை காட்சிகள் அனுமதி.. ஆனால் ஒரு சிக்கல்.. !

விஜய் ரசிகர் ஆசைப்பட்ட லியோ சிறப்புக் காட்சி இறுதியாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொன்னால் இப்போது தான் அவர்களுக்கு நிம்மதி வந்து பெருமூச்சு விட்டுள்ளனர். நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் ஜோடியில் முழுக்க முழுக்க அதிரடியாக தயாராகியுள்ள திரைப்படம் லியோ.

- Advertisement -

படத்தின் டிரெய்லர் தரம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவே இதுவரை பார்க்காத ஓர் விஜய்யை காட்டியுள்ளார். டிரெய்லரைக் கண்ட உடனே படத்தைக் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தை மேலும் தூங்கியது. காத்திருப்பு எல்லாம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வரை தான்.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் பெரிய படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிடுவது வழக்கமாகிவிட்டது. இரவு முதலே கொண்டாததை ஆரம்பித்து படத்தை சிறப்பாகக் கண்டு செல்வர். போக போக அதற்கு மவுசு அதிகமாகி டிக்கெட் விளையும் ஏறியது. குறைந்தது ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை வசூலித்துக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

பல வருடங்களுக்குப் பின் விஜய் – அஜித் கடந்த பொங்கலுக்கு மோதினர். மிகுந்த வாக்குவாதங்களுக்குப் பின் துணிவு படதுக்கு 1 மணிக் காட்சியும் வாரிசுக்கு 4 மணி காட்சியும் கொடுக்கப்பட்டது. முந்தைய நாள் இரவு முதலே இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தை துவங்கினர். அதனால் வந்த விளைவு தான் அதிகாலை காட்சி ரத்து.

- Advertisement -

அன்று கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மேல் ஏறி கொண்டாடிய போது கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இது போன்ற அசம்பாதிவங்களை தவிர்ப்பதற்காக எந்தப் படமாக இருந்தாலும் அதிகாலை காட்சிகள் இனி கிடையாது என அறிவித்தது.

லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருவதால் அதற்கு டிமாண்ட் அதிகம் எனச் சொல்லி லியோ தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு கூடுதல் காட்சிகள் வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்து. தமிழக அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது. அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் தியேட்டர் நிர்வாகம் வழங்குவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அக்டோபர் 19ஆம் தேதி முதல் நாள் மட்டும் அதிகாலை 4 மணி காட்சி போடப்படும். காலை 7 மணி காட்சி ரீலீஸ் தேதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி படக்குழு, ரசிகர்கள் மற்றும் தியேட்டர்களை திருப்திப்படுத்தியுள்ளது. எனினும் இன்னும் சில ரசிகர்கள் ஒரே ஒரு நாள் மட்டுமே அதிகாலை காட்சிகள் என அழுதுக் கொண்டிருக்கின்றனர். ஒண்ணுமே இல்லாததுக்கு இது எவ்வளவோ மேல் என கருதுவது நல்லது.

Most Popular