தமிழ் சினிமாவில் ஒரு நடிகரும் ஒரு இசையமைப்பாளரும் இணைந்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். அந்த கூட்டணியில் சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய ஜோடியாகும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கையை கொடுத்த திரைப்படம் என்றால் அது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
அந்த திரைப்படம் தான் இந்த படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டானது. இதன் மூலம் தான் சிவகார்த்திகேயன் என்றால் யார் என்று பல தரப்பு மக்களுக்கு தெரிந்தது.இந்த படத்திற்கு பாடல்களை அமைத்தவர் டி இமான் தான்.
இதைப் போன்று ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல வெற்றித் திரைப்படங்களுக்கு டி இமான் பாடல் அமைத்திருக்கிறார். இது குறித்து பேசிய சிவகார்த்திகேயனே, எனக்கு இசையமைக்க வேண்டும் என்றால் வேற ஒரு லெவலில் இறங்கி டி இமான் இசை அமைத்து தருவார் என்று பாராட்டி இருந்தார்.
ஆனால் இந்த கூட்டணி திடீரென்று பிரிந்தது.இவர்களுக்குள் மோதல் இருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் நேற்று டி இமான் அளித்த பேட்டி ஒன்று பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது உங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதேனும் பிரச்சனையா என நெறியாளர் கேட்டதற்கு ஆம் அது மிகப்பெரிய பிரச்சனை.
சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்துவிட்டார் என்று டி இமான் பதில் கூறினார். இனி நீங்கள் இணைந்து படம் செய்ய மாட்டீர்களா என நெறியாளர் கேட்டதற்கு இந்த ஜென்மத்தில் அது நடக்காது. அப்படி ஒரு பெரிய துரோகத்தை சிவகார்த்திகேயன் எனக்கு செய்துவிட்டார்.
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் அதில் நான் இசையமைப்பாளராகவோ அவர் ஹீரோவாக இருந்தால் வேண்டுமானாலும் நாங்கள் இணைந்து பணியாற்றலாம். ஆனால் இப்போது அது நடக்காது. இந்த துரோகம் குறித்து நான் சிவகார்த்திகேயன் இடமே நேராகவே கேட்டுவிட்டேன்.
ஆனால் அவர் கூறிய பதிலை என்னால் வெளியே சொல்ல முடியாது. சிவகார்த்திகேயன் எனக்கு என்ன துரோகம் செய்தார் என்று கூறினால் அது என்னுடைய குழந்தைகளுக்கு தான் ஆபத்து இமான் என்று கூறினார். சிவகார்த்திகேயன், டி இமானின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் தான் இந்த பிரச்சனையை காரணம் என்று சினிமா வட்டாரங்கள் கூறப்படுகிறது.