Tuesday, October 22, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ பிளாக்பஸ்டர்- தெறிக்கவிட்ட லோகேஸ் கனகராஜ்.. மாஸ் ஹிட்

லியோ பிளாக்பஸ்டர்- தெறிக்கவிட்ட லோகேஸ் கனகராஜ்.. மாஸ் ஹிட்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. லியோ படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லியோ திரைப்படம் ரிலீசான ஒவ்வொரு திரையரங்கமும் திருவிழா போல் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் படத்தின் விமர்சனம் பிரமாதமாக வந்திருப்பது படத்திற்கு மேலும் பலத்தை இருக்கிறது.நடிகர் விஜய் இதுவரை நடிக்காத வகையில் தனது இன்னொரு முகத்தை படத்தில் காட்டி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் படத்தை விஜய் தனது தோளில் சுமந்து எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.படத்தின் முதல் பாகம் பிரமிக்கும் வகையில் இருப்பதாகவும் இரண்டாவது பாகம் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும் சண்டை காட்சிகள் மற்றும் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலத்தை சேர்த்திருப்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன.

- Advertisement -

மேலும் எப்போதும் போல் படத்தில் பலத்திற்கு அனிருத் இசை ஒரு தூண் போல் அமைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளது. நடிகர் விஜய் போல் லோகேஸ் கனகராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் படத்திற்கு இன்னொரு ஹீரோக்கள் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

மேலும் நாம் ஏற்கனவே கணித்தது போல் ஹிஸ்ட்ரி ஆப் வயலன்ஸ் திரைப்படத்தின் வருவது போல் படத்தின் கதைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். இதைப் போன்று சஞ்சய் தத் ,அர்ஜுன் ஆகியோர் மிரட்டி இருப்பதாகவும் விஜய் பிடிக்காதவர்கள் அவர்களுக்காக வந்து படத்தை பார்க்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் படத்தை அமைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

படத்தில் பல ஆச்சரியங்கள் ரசிகர்களுக்கு காத்திருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளது. இது எல் சி யு வா இல்லையா என்பது குறித்து ரசிகர்கள் தாங்களை திரையரங்கு தெரிந்து கொண்டால் தான் படம் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்பதால் அதைப் பற்றி நாங்கள் எதையும் குறிப்பிடவில்லை.

லியோ திரைப்படம் நடப்பாண்டில் வெளியான அனைத்து திரைப்படங்களின் வசூலையும் முறியடிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Most Popular