தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் மிஷ்கின். பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ள அவர் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார். இதற்கு இடையில் அவர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார். அவரது சகோதரரான ஜி.ஆர்.ஆதித்யாவின் ‘ டெவில் ’ படத்திற்கு முதல் முறையாக இசையமைத்து இருக்கிறார்.
இயக்குனர் ஆதித்யா இதற்கு முன் ‘ சவரக்காதி ’ எனும் படத்தை இயக்கியுள்ளார். அவரது டெவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பட உறுப்பினர்கள் தவிர இயக்குனர்கள் வெற்றிமாறன், கதிர், பாலா என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், இளையராஜாவுக்கும் தனக்கும் சண்டை அதனால் அவரிடம் மறுபடியும் செல்ல மாட்டேன் என மீண்டும் ஓர் முறை அழுத்தமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ என் குருநாதர் ராமமூர்த்தி எனக்கு கர்நாடக இசையும் ஹிந்துஸ்தானி இசையும் கற்றுத் தருகிறார். அவரைப் போலவே மற்றொரு குரு ஒருவர் எனக்கு இருக்கிறார், அவர் இளையராஜா. அவரை வணங்குகிறேன். ”
மேலும், “ எட்டு வயதில் அண்ணக்கிளியே உன்னைத் தேடுதே எனும் பாடலைக் கேட்ட முதல் இன்று வரை அவர் எனக்கு குருநாதரே. அவருடன் இணைந்து பணியாற்றிய பின்பும் ஏன் இசை அமைக்க வந்துள்ளேன் என கேட்டீர்கள் என்றால், அவருக்கு எனக்கும் சண்டை. மீண்டும் அவரிடம் போய் நிற்க மாட்டேன். ஏதாவது செய்யலாம் என இருக்கும் போது தான் இசையமைக்க வந்துள்ளேன். ”
ஏற்கனவே நேர்காணல் நிகழ்ச்சியில் தனக்கும் இளையராஜாவுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் குறித்து அவர் பேசினார். முதலில் தன்னை அப்பா என அழைக்க கூடாது என இளையராஜா அழுத்தமாக மிஷ்கினிடிம் கூற, அவர் ஸ்டுடியோ படிக்கட்டில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுததை பற்றி வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதன் பின்னர் சைக்கோ படத்தில் ‘ உன்னை நெனச்சி நெனச்சி ’ பாடலை சித் ஶ்ரீராம் பாடுவதை இளையராஜா ஏற்கவில்லை.
அவரின் வார்த்தைகளை சற்றும் காதில் போட்டுக் கொள்ளாமல் இளையராஜாவுக்கு தெரியாமல் சித் ஶ்ரீராமை வைத்து அந்த பாஸ்லாய் நிறைவு செய்தார் இயக்குனர் மிஷ்கின். இத்தகு வேறுபாடுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து பணியாற்றுவது மீண்டும் நடக்காது என மிஷ்கின் அன்றே இளையராஜாவிடமும் கூறிவிட்டார். இருப்பினும் இசைக் கலைஞராக இளையராஜாவின் மேல் இன்னும் மரியாதை வைத்துள்ளார். ஆனால் இளையராஜாவோ அதிக தலைக்கணம்