Thursday, May 16, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி விஜய்யே பக்கத்து மாநில ஹீரோக்களை நம்பி தான் இருக்கிறார்கள்.. இயக்குனர் அமீர் அதிரடிப் பேச்சு.....

ரஜினி விஜய்யே பக்கத்து மாநில ஹீரோக்களை நம்பி தான் இருக்கிறார்கள்.. இயக்குனர் அமீர் அதிரடிப் பேச்சு.. !

இயக்குனர் பாலாவிடம் துணை இயக்கனராக பணிபுரிந்து பின்னர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நல்ல படங்களைத் தந்தவர் ஆமீர். சூர்யாவை வைத்து முதன் முதலில் மௌனம் பேசியதே எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பருத்திவீரன், ராம், ஆதிபகவன் ஆகியவற்றை இயக்கினார்.

- Advertisement -

இயக்குனராக இருந்த அவர் 2013க்கும் பின்னர் எந்தப் படங்களையும் இயக்கவில்லை. இடையில் நடிகராக தொடர்ந்த அவர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் ராஜன் எனும் தரமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

அவரும் வெற்றிமாறனும் இணைந்து தற்போது மாயவலை எனும் படத்தை தயாரித்து உள்னர். ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சஞ்சனா ஷெட்டி, தீனா, சரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இயையமைதுள்ளார். ரீலீசுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்து படக்குழு பேசியது.

- Advertisement -

அதில் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவிருப்பதாக புதியதோர் அறிவிப்பை வழங்கினார். மேலும் அவரும் அமீரும் நல்ல நண்பர்களாக இன்றும் இருப்பதால் தான் அவருடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறினார். இந்தப் படத்தை வெளியிட அமீருக்கு நம்பிக்கை அளித்ததே வெற்றிமாறன் ஒருவர் தான்.

- Advertisement -

மறுபக்கம் இயக்குனர் மற்றும் நடிகருமான அமீர் செய்தியாளர்களிடம் படத்தைப் பற்றிப் பேசினார். அவர் கூறியதாவது, “ இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களை அணுகினோம். யாரும் ஒத்துழைக்கவில்லை. அதனால் தான் நானே நடித்துவிட்டேன். இது எனக்கொரு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. ரீலீஸ் விஷயத்தில் வெற்றிமாறன் மிகவும் உதவியாக இருந்தார். ”

மேலும் விஜய் மற்றும் ரஜினியை பற்றி அவர் பேசியது சற்று சர்ச்சையை ஏற்படுதியுள்ளது. அமீர், “ ரஜினி விஜய்க்கே பக்கத்து மாநில ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள். அப்படிப் பார்க்கையில் எனக்கு வெற்றிமாறன் உதவி தேவைப்படுவதில் எந்த ஆச்சர்யம் இருக்கப் போகிறது. ” இது தவிர சூர்யாவுடன் இன்னும் பேசவில்லை என்பதால் ஜப்பான் இசைவெளியீட்டு விழாவுக்கு அவருக்கு அழைப்பு வரவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

Most Popular