Monday, November 25, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் மீது இவ்வளவு வன்மம்? ரசிகர்களிடம் சிக்கி கொண்ட ரஜினிகாந்த் குடும்பம்

விஜய் மீது இவ்வளவு வன்மம்? ரசிகர்களிடம் சிக்கி கொண்ட ரஜினிகாந்த் குடும்பம்

சமூக வலைத்தளத்தில் எப்போதுமே நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான் அதிக அளவு துருதுருவென இருப்பார்கள். ட்ரெண்டிங் செய்வது தங்களுடைய ஹீரோக்களை புகழ்வது எதிர் தரப்பை கிண்டல் செய்வது என எப்போதுமே சமூக வலைத்தளத்தில் அவர்கள் கொடிதான் பறக்கும்.

- Advertisement -

ஆனால் சமீப காலமாக நடிகர் ரஜினி ரசிகர்கள் அதிக அளவு சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். நடிகர் ரஜினி ரசிகர்கள் எல்லாம் வயதாகி இருப்பார்கள். இதனால் அவர்கள் சமூக வலைத்தள பக்கமே வர மாட்டார்கள் என்ற கருத்து இருந்தது.

ஆனால் திடீரென்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஜினிக்கு அதிக அளவு சமூக வலைத்தளத்தில் எவ்வாறு ரசிகர்கள் பெருகினர் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு சிலர் இது ரஜினியின் உண்மையான ரசிகர்கள் கிடையாது என்றும் ரஜினியின் குடும்பத்தினர் தான் ஐடி விங்கை தொடங்கி தற்போது ரஜினிக்கு ஆதரவாக பல கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் போடுவதாக கூறப்பட்டது.

- Advertisement -

தமக்கு போட்டியாக வரும் நடிகர்களை சமூக வலைத்தளத்தில் விமர்சித்து பொய் செய்தி பரப்புவதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மேலும் அஜித் ரசிகர்களின் நடமாட்டமும் தற்போது சமூக வலைத்தளத்தில் குறைந்து இருப்பதால் நடிகர் அஜித் ஐடி விங்கை பார்க்கும் நபர்தான் இதையும் செய்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய்யை விமர்சித்து போடப்படும் டிவிட்டுக்கு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே லைக் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் நடிகர் விஜயை விமர்சித்து ரசிகர் ஒருவர் போட்டுள்ள டிவிட்டை லைக் செய்து சிக்கிக் கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் நடிகர் விஜய் மீது வன்மத்துடன் ரஜினி குடும்பத்தினர் இருப்பதாக விஜய் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும் ரஜினிக்கு திடீரென்று ஆதரவாக கணக்குகள் தொடங்கப்பட்டது. அவருடைய இடம் சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்கள் குடும்பத்தினர் தான் இந்த பணியை செய்வதாகவும் தற்போது ஒரு பதிவுக்கு லைக் செய்து சிக்கிக் கொண்டு விட்டதாகவும் விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில் அது லதா ரஜினிகாந்த் கணக்கே கிடையாது என்று ரஜினி ரசிகர்கள் விளக்கம் அளித்தாலும், ரஜினியின் மகளே இந்த கணக்கை குறிப்பிட்டு தான் பல பதிவுகளை போட்டு இருக்கிறார் என்றும் விஜய் ரசிகர்கள் ஆதாரம் காட்டி வருகிறார்கள். எனவே தற்போது சமூக வலைத்தளத்தில் விஜய் ரஜினி ரசிகர்கள் மோதல் உருவாவதற்கு காரணமே ரஜினிகாந்த் குடும்பத்தினர் தான் என்று தெரியவந்துள்ளது.

Most Popular