Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ரஜினி - கமல்... கார்த்திக் சுப்புராஜ் சர்ப்ரைஸ் பதிவு வைரல்.....

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ரஜினி – கமல்… கார்த்திக் சுப்புராஜ் சர்ப்ரைஸ் பதிவு வைரல்.. !

கலைஞர் தொலைக்காட்சி நடத்திய நாளை இயக்குனர் நிகழ்ச்சி மூலம் பல்வேறு குறும்படங்களை செய்து இன்று தமிழ் சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட என அடுத்தடுத்து படிக்கும் நகர்ந்தார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமாக இயக்குனர் – கேங்ஸ்டரை மையமாக வைத்து மதுரையை சுற்றி நடக்கும் சம்பவங்களை படமாக எடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். அது தான் ஜிகர்தண்டா. இதில் ஹீரோவாக சித்தார்த் வில்லனாக பாபி சிம்ஹா நடித்தனர். அசால்ட் சேது கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி பாபி சிம்ஹா தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் 2 நாளில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இதில் இம்முறை ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யாவும் வில்லனாக ராகவா லாரன்ஸும் நடித்திருக்கின்றனர். அண்மையில் வெளியான டிரெய்லர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

- Advertisement -

இன்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் குறித்த தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பதிவிட்டதாவது, “ நான் அந்தக் காலத்தில் பிறந்து இருந்தால் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருப்பேன். ” என்றார்.

- Advertisement -

எனது துணை இயக்குனர் மகேஷ் பாகு அதனை சீரியஸாக எடுத்து புகைப்படத்தில் கொண்டு வந்துள்ளார் எனக் கூறி ஜிகர்தண்டா பாகம் 2 போஸ்டரில் ரஜினி மற்றும் கமல் முகங்களை வைத்து ஓர் போஸ்டரை வெளியிட்டுள்ளார். வில்லனாக வரும் ராகவா லாரன்ஸ் முகத்தில் ரஜினி முகமும் எஸ்.ஜே.சூர்யா இடத்தில் கமலையும் வைத்து எடிட்டிங் செய்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டரண்டினோவின் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டு அவரின் ஸ்டைலில் கோலிவுட்டில் படங்கள் செய்கின்றார். அவரது அனைத்து படங்களிலும் அதை நாம் உணரலாம். தற்போது ஜிகர்தண்டா 2 முழுக்க முழுக்க ஹாலிவுட் சாயலில் தென்படுகிறது, நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular