துணிவு படத்திற்குப் பின் விக்னேஷ் சிவனின் படம் கைவிடப்பட்டு இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கைகோர்த்தார் நடிகர் அஜித்குமார். அவரின் 62வது படமாக இது அமைந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அண்மையில் வெளிநாட்டில் நடந்து வருகிறது.
மே மாதம் விடாமுயற்சி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. உடனே ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாதம் அடுத்த மாதம் என அடுத்தடுத்து தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. அஜித்தும் மறுபக்கம் பைக் ரைடில் பிஸியாக இருந்தார். இறுதியாக கடந்த மாதம் படக்குழு அஜர்பைஜானில் ஷூட்டிங்கை துவங்கியது.
படத்தில் அஜித்துடன் சஞ்சய் தத், அர்ஜுன், ஆரவ், திரிஷா என பெரிய பெரிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஷூட்டிங்காக இவர்கள் படக்கிழுவுடன் தற்போது பயணிக்கிறார்கள். ஆனால் இன்னும் லைகா நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ பட்டியல் வெளியாவில்லை. ஒருவேளை பாதி ஷூட்டிங்க்கு பிறகு அறிவிக்கலாம் எனும் திட்டத்தில் இருக்க வாய்ப்புண்டு.
அஜர்பைஜானில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் ஷூட்டிங்கின் முதல் அட்டவணை வெற்றிகரமாக நிறைவு பெற்றுவிட்டது. சென்னை திரும்பு தீபாவளியைக் கொண்டாடிய பிறகு ஷூட்டிங்க்கு திரும்பலாம் என திட்டமிட்டிருந்ததில் ஒரு புதிய மாற்றம். ஒட்டுமொத்த வெளிநாட்டு அட்டவணையும் முடித்துவிட்டு பிறகு ஊர் திரும்பலாம் என முடிவெடுத்துள்ளனர்.
இன்று விடாமுயற்சி படத்தின் இரண்டாம் அட்டவணை துவங்கிவிட்டது. வலிமை படமும் இதே போல தான் தீபாவளி பண்டிகை எனப் பாராமலும் ஷூட்டிங் சென்றது. வலிமை படத்தின் மற்றொரு ஒற்றுமையும் அஜித்தின் விடாமுயற்சிக்கு உள்ளது. நல்ல ஆக்க்ஷன் படமாக சென்ற வலிமையில் இரண்டாம் பாதியில் சென்டிமென்ட்டைக் கொண்டு வந்து பார்வையாளர்களை கொண்றுவிட்டனர்.
தற்போது விடாமுயற்சி படத்திலும் ஃபேமிலி ஆடியன்ஸ்க்குத் தேவையான சென்டிமென்ட் காட்சிகள் இடம்பெற உள்ளதாம். இது அஜித் ரசிகர்களை சற்று பயத்தில் ஆழ்தியுள்ளது. வீரம் படத்தின் முதலே அஜித் இந்த ஃபேமிலி ஆடியன்ஸ் பக்கம் திரும்பியுள்ளதால் பழைய பில்ல மங்காத்தா போன்ற ஹீரோவை அஜித் ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர்.