Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாஅழுதுட்டேன்.. அதில் வரும் வலியை சொல்ல இயலாது... மனம் உடைந்து போன இயக்குனர் செல்வராகவன்

அழுதுட்டேன்.. அதில் வரும் வலியை சொல்ல இயலாது… மனம் உடைந்து போன இயக்குனர் செல்வராகவன்

நேற்று இரவு நடந்த சம்பம் பல கோடி இந்தியர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. அதில் ஒருவரான நம் கோலிவுட் இயக்குனர் செல்வராகவன் தன் டிவிட்டர் பக்கத்தில் நேற்று நடந்த சோகமான தருணத்தைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அக்டோபர் மாதம் துவங்கிய கிரிக்கெட் உலகக்கோப்பை நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அரங்கேற்றியது, அதனால் வெற்றிக்கான சதவீதம் அதிகமாகவே இருந்தது. இருப்பினும் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் கோட்டை விட்டு வழக்கம் போல் ரசிகர்களின் மனங்களை உடைத்தனர்.

லீக் சுற்றில் அனைத்து வீரர்களும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தகுதி பெற்றனர். ஒரு கட்டத்தில் இந்த இந்திய அணியை யாராலும் வீழ்த்த இயலாது என்ற அளவிற்கு ஆடினர். அரை இறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பழியும் தீர்த்தனர். இறுதிப் போட்டியில் நிச்சயம் வென்று 2003ஆம் ஆண்டுக்கு பதிலடி கொடுப்பார்கள் இந்திய வீரர்கள் என்ற நம்பிக்கையில் அனைவரும் காணப்பட்டனர்.

- Advertisement -

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு ஜாதி, மதம், கட்சி என அனைத்தையும் ஒன்று சேர்க்கும் அளவு சக்தி கொண்டது. நேற்றுக்கும் அது விதிவிலக்கல்ல. பெரிய பெரிய நிறுவனங்களின் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் முதல் பட்டித் தொட்டியில் இயல்பு வாழ்க்கை வாழும் மனிதன் வரை அனைவரும் இந்திய அணிக்கு ஒன்று சேர்வர்.

- Advertisement -

நம் மனதில் அவ்வளவு இணைப்பு கொண்ட இந்த ஆட்டத்தின் இறுதியில் தோல்வியை தழுவி கோப்பையை கைப்பற்றாதது பெரும் துயரத்தை உண்டாக்கியது. 2014 முதல் 2023 வரை 9 தொடர்களில் இந்தியா இது போல் நடையைக் கட்டி வருகிறது. இந்த ஆண்டு நிச்சயம் சந்தோஷத்தைக் காணலாம் என்ற எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியானது.

என்னதான் இந்தியா தோல்வியைக் கண்டாலும் பிரதமர், பிரபலங்கள் உட்பட அனைவரும் சமூக வலைத்தளத்தில் இந்த அளவு வந்த இந்திய அணியைப் பாராட்டியே வருகின்றனர். கிரிக்கெட்டைத் தாண்டி அதிக தேசி பக்தி கொண்டவர்களால் எடுத்துக் கொள்ளும் நபர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் இந்திய அணி தோல்வியை தழுவியப் பின் அழுதுள்ளார். தன் டிவிட்டர் பக்கத்தில் அவர், “ நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது. ” என மிகவும் வலியோடு பதிவிட்டுள்ளார்.

Most Popular