கௌதம் வாசுதேவ் மேனன் – சியான் விக்ரம் காம்போவில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படம் நாளை திரைக்கு வராது என பின்வாங்கியது. ஜி.வி.எம் உடைய எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம் இதற்கு முன் கணக்கில் அடங்கா தடவை தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக 2019இல் வெளியானது.
துருவ நட்சத்திரமும் அதே போலத் தான் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டடுக் கொண்டே உள்ளது. நாளை வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டு வந்த நிலையில் கடைசியாக தமிழக உரிமம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு பின்வாங்கியுள்ளது. கிட்டத்தட்ட 9 வருடங்கள் முன் அறிவிப்பு வந்த படம் இன்னும் ரீலீஸ் ஆகாமல் இருப்பது சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்கள் கன்டென்ட்டாக கலாய்க்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் கௌதம் மேனன் வர்த்தக ரீதியாக மிகவும் சோதிக்கபட்டார். அதனை ஈடுகட்டுவதற்காக பல படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். சரியான சமயத்தில் வேல்ஸ் நிறுவனம் அவருடன் நின்றது. அவரின் கடைசிப் பிரச்சினையாக இருக்கும் துருவ நட்சத்திரம் ஒருவழியாக நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்னும் ரீலீஸ் சிக்கல் தீராததால் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா இயக்குனர் கௌதம் மேனன் அணுகியுள்ளனர். அவருக்கு இருக்கும் ரீலீஸ் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் பதிலாக லைகாவுக்கு அஜித் அல்லது சூர்யாவை வைத்து ஒரு பெரிய படம் செய்து தருமாறு கேட்டுள்ளனர். இவ்வாறாக சமூக வலைதனகளில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு அவர் சம்மதித்தாரா இல்லையா எனத் தெரியவில்லை.
ஒருவேளை கௌதம் மேனன் ஒத்துக்கொண்டால் இரு தரப்பு ரசிகர்களும் ஹாப்பி. சூர்யா – ஜி.வி.எம் காம்போவில் காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இரு தரமான படங்கள் ஏற்கனவே வந்துள்ளது. அஜித்தை வைத்து கௌதம் மேனன் என்னை அறிந்தால் படத்தை இயக்கினார். அஜித்தின் க்ளாசியான படங்களில் இது ஒன்று.
சியான் விக்ரம், ரித்து வர்மா, விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாரிஸ் ஜெயராஜினீ துல்லியமான இசையில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம் இன்று தவறினால் வரும் சனிக்கிழமை அல்லது டிசம்பர் 1ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.