இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைப்பாளராக செயல்படுகிறார்.
மே மாதம் அறிவிப்பு வந்தவுடன் உடனனே ஷூட்டிங் துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு வழியாக செப்டம்பர் மாதம் இறுதியாக துவங்கப்பட்டது படப்பிடிப்பு.
துபாய் அஜர்பைஜானில் முதற் கட்டப் பணிகளை ஆரம்பித்தது படக்குழு. ஹால்வுட் படம் பிரேக்டவுன் சாயலில் விடாமுயற்சி உருவாவதாக தகவல்கள் வெளியாகின. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்த புகைப்படங்களும் அதை உறுதி செய்கின்றன. எனினும் இன்னும் சில காலம் பொறுத்திருந்து தான் அதிகாரபூர்வமாக தெரிந்து கொள்ள இயலும்.
அஜர்பைஜானில் தொடர்ந்து ஷூட்டிங் நடந்து கொண்டே இருந்தது. இடையில் கலை இயக்குனர் மிலான் இறந்த செய்தி படக்குழுவை உலுக்கியது. படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக அவரது மனைவியே அந்தப் பொறுப்புகளை பார்த்துக் கொள்கிறார். மேலும் தீபாவளிக்கு கூட படக்குழு சென்னை திரும்பாமல் ஷூட்டிங்கிலேயே முழு கவனமும் செலுத்தியது.
மொத்த ஷூட்டிங்கும் வெளிநாட்டிலேயே முடித்துவிட படக்குழு எண்ணுகிறது. கிட்டத்தட்ட 40% படம் நிறைவு பெற்றுவிட்டது. கதாநாயகன் அஜித்குமார் ஷூட்டிங் இடையே நேற்று சென்னை திரும்பியுள்ளார். முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டு தனிப்பட்ட வேலைகளுக்காக அவர் வந்துள்ளார் என செய்திகள் கிடைத்துள்ளன. உடனே மீண்டும் ஷூட்டிங் திரும்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சி திரைப்படம் மிகவும் சிறிய காலத்தில் ஷூட்டிங் செய்யப்படும் படம் என ஏற்கனவே இயக்குனர் மகிழ் திருமேனி & கோவில் இருந்து தெரிவித்துள்ளனர். ஜனவரி இறுதிக்குள் படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மே மாதம் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.