இந்த ஆண்டு இந்திய சினிமாவில் ஏராளமான சிறப்பான படங்கள் வந்தன. அதனுடன் பலரது தரமான நடிப்பையும் மக்கள் ரசித்தனர். அதனை வைத்து ஐ.எம்.டி.பி இந்திய சினிமாவில் இந்த ஆண்டிற்கான டாப் 10 ஸ்டார்கள் (நடிகை + நடிகைகள்) பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்திய சினிமாவுக்கு பாலிவுட்டைத் தொடர்ந்து நல்ல படங்களைத் தருவது கோலிவுட் தான். அத்தகு கோலிவுட்டில் இருந்து முக்கிய நடிகர்கள் ஒருவர் தவிர வேறு யாரும் அப்பட்டியல் இல்லாதது நம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
பெரும்பாலான நடிகர்கள் ஹிந்தியில் இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். லிஸ்ட்டில் முதலில் இருப்பது பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான். பதான், ஜவான் படங்களின் மூலம் 1000 கோடி வசூல் தந்து தரமான கம்பேக் கொடுத்தவர் இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது எந்த வித ஆச்சர்யமும் அளிக்கவில்லை.
அடுத்த மூன்று இடங்களில் அலியா பட், தீபிகா படுகோனே, வமிக்கா கப்பி இருக்கின்றனர். இதில் அண்மையில் மிகவும் பிரபலமானவர் வமிக்கா கப்பி. தமிழில் தியாகராஜ குமாரராஜா இயக்கிய மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸின் ஒரு எப்பிசோடில் தன் அழகால் ரசிகர்களை கவர்ந்தவர். ஹிந்தியிலும் 5 படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் நயன்தாரா, தமன்னா, கரீனா கபூர், சோபித்தா ஆகியோர் உள்ளனர். இதில் நயன்தாரா முதன் முதலில் பாலிவுட் படத்தில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தமன்னா தன் 2.0 வெர்சனில் கிளாமர் கூடி வெப் சீரிஸ் & படங்கள் நடித்துள்ளார்.
கடைசி இரண்டு இடங்களில் அக்ஷய் குமார் மற்றும் விஜய் சேதுபதி உள்ளனர். இந்தப் பட்டியலில் இருக்கும் ஒரே தமிழ் ஹீரோ இவர் தான். விஜய், அஜித், ரஜினி இல்லாதது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் & லியோ படங்களில் நடித்த ரஜினி மற்றும் விஜய் பேன் இந்தியா அளவில் சாதனைகள் படைத்துள்ளனர். அவர்கள் இல்லாதது சற்று வருத்தமே.